பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உக శf &? ? 2. శ్రీ3) இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே இளம்பூரணம் : என். எனின். ஆசிரியப்பாவிற்கு உரியசீர் உணர்த்துதல் துத லிற்று. (இ-ள்.) இனிய ஓசை பொருந்தி வருகுவதாயின் ஆசிரிய வடிக்கு வெண்பாவுரிச்சீர் வரையார் ஆசிரியர் என்ற வாறு. (உக) இது, கட்டளையடியல்லாத வழிச் சீர்மயங்குமா றுணர்த்து தல் நுதலிற்று. (இ-ஸ்.) இன்னோசைத்தாகிய துணிவிற்றாகிவரின் ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும் (எ-று.) 'இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" (புறம். 19) எனத் தலையாலம்’ என்றவழி ஆசிரியவடியுள் இன் சீரியைய வெண்சீர் வந்தது. முன்னர் வெண்சீரினை, 'இன்பா நேரடிக் கொருங்கு நிலையில’ (தொல், செய், 23) என விலக்கி, ஈண்டு வரை யாரென் றமையின் அது கட்டளையடிக் கென்பது உம் இது கட்டளையடிக் கன்றென்பது உம் பெற்றாம். வருகுவதாயினென்று ஒருமை கூறினமையானும் இயைய வென்றதனானும் ஒரடிக்கண் ஒன்றே யாண்டும் வருவதெனக் கொள்க.1 (sh O) 1 . இன் சீர் இசையவருதலாவது, இனியஒசை பொருந்தச் சீர்கள் தம்முள் இயைந்து வருதல்; ஆசிரியப்பாவின் இனியவோசைக்குப் பொருந்தவருທru;r ஆசிரியவடியின்கண்ணே வெண்பாவுரிச்சீர் கலந்து வருதலை நல்லிசைப் புலவர்கள் விலக்கமாட்டார்கள். எனவே அகவலோசைக்கு முரண்படாதவாறு ஆசிரியவடியில் வெண்பாவுரிச்சீரும் கலந்துவருதல் உண்டு என்பதாகும். 2. வெண்ப்ாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஆசிரியப்பாவில் ஒருங்கு நிற்றல் இல்லை என இவ்வியல் 23-ம் சூத்திரத்திற்கூறியது கட்டளையடியாசிரியப்பாவுக்கு எனவும், ஆசிரியவடிக்கு வெண்சீர்வரையார் என சண்டுக் கூறியது சீர்வகையடிக்கு எனவும், வருகுவது என ஒருமை கூறியவதனால் யாண்டும் வெண்பாவுரிச்சீர் ஒரடிக்கண் ஒன்றே வருவது எனவும் விளக்கந்தருவர் -