பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்

பொருளதிகாரம்

செய்யுளியல்

உரைவளம் க. மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனாஅ யாத்த சீரே அடியாப் பெனாஅ மரபே தூக்கே தொடைவகை எனாஅ நோக்கே பாவே அளவியல் எனாஅ தினையே கைகோள் பொருள்வகை எனாஅ : கேட்போர் களனே காலவகை எனஅ பயனே மெய்ப்பா டெச்சவகை எனாஅ முன்னம் பொருளே துறைவகை எனகஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும் அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயையே புலனே இழையென அப் பொருந்தக் கூறிய எட்டொடுத் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென் வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. என்பது சூத்திரம். இனம்பூரணம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், செய்வு. லென்னும் பெயர்த்து. செய்யுளிலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். மேலுணர்த்தப்பட்ட பொருண்மை யெல்லாவற்றிற்கும் இஃதிடமாதலின்' அவற்றின்பிற் கூறப்பட்டது.

  • கூற்றுவகையெனாஅ என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட

பாடம் . 1. இஃது என்றது, செய்யுளை