பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6Yf ᏜᎿ © _ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் நச்சினார் க் கினியம் : இது கட்டளை யல்லுழி வெண்சீர் மயங்குமாறு உணர்த் (இ-ள் ) இனிய ஓசை பொருந்த வரும் ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும். எ-று. உ-ம் 'இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடைக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து’’ (புறம்-கக) என்றவழித் தலையாலம் என ஆசிரியவடியுள் இன்சீர் இயைய வெண்சீர் வந்தது. வருகுவதாயின் என்ற ஒருமையான் ஒரடிக்கண் ஒன்றே வருதல் சிறப்புடைத்து: பல வருதல் சிறப்பின்றாம். ஆய்வுரை : இஃது, ஆசிரியப்பாவுக்கு உரிய சீர் உணர்த்துகின்றது. (இ-ள்) இனிய ஓசை பொருந்தி வருமாயின் ஆசிரிய அடிக்கண் வெண்சீர் வருதலை விலக்கார் ஆசிரியர் எ-று. வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்கு நிலையிலவே' (செய்-22) என முன்னர் வந்த சூத்திரம் கட்டளையாசிரியப்பாவினுள் அடியுறழப்படாத சீர் இவையென வுணர்த்தியது எனவும் இச்சூத்திரம் கட்டளையடியல்லாதவழிச் சீர் மயங்குமாறு உணர்த்துவது எனவும் கொள்வர் பேராசிரியர். Ε-ιϊ அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர் ஒன்றுத லுடைய ஒரோவொரு வழியே.? இளம்பூரணம் : என்.எனின். இதுவுமது. (இ-ஸ்.) இன்சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரிய அடிக்கண் வரும் என்றவாறு.3 முன் பக்கத் தொடர்ச்சி இன்சீரியையவருகுவதாயின்’ என்றமையான் இது சீர்வகையடி பென்பது பெறப்படும். 1 , வரும்’ என்பது, வரின்' என்றிருத்தல் வேண்டும். 2. ஒரொருவழியே என்பது பேராசிரியருரையிற்கண்டபாடம்.

  • )

இனிய ஓசை பொருந்தச் சீர்கள் தம்முள் இயைந்து வருமாயின் வஞ்சி புரிச்சீரும் ஒரோவழி ஆசிரியவ:டியின் கண் வரும் என்பதாம்.