பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஆய்வுரை : இஃது ஆசிரியவடியுள் வஞ்சியுரிச்சீர் விரவுமாறு உணர்த்து. கின்றது. (இ-ள்) அங்ங்ணம் இன்னோசை யுட்ையதாகச் சீர் பொருந்தி வருமாயின் ஆசிரியத்துள் ஒரொருவழி வஞ்சியுரிச்சீர் பொருந்தி வருதல் உடைய எ-று. உதாரணம் இச்சூத்திரத்தின் முன்னைய வுரைகளில் இடம்பெற்றுள்ளமை காண்க. ஒரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு, முவசைச்சீர் அறுபத்து நான்கு, ஆகச் சீர் எண்பத்து நான்காகும். அவற்றுள் அசைச்சீர் நான்கும் தளை கொள்ளுமிடத்து இயற்சீரேபோலக் கொள்ளப்படும். ஈரசைச்சீர் பதினாறினும் இயற்சீர் சிறப்புடைய இயற்சீர் நான்கு, சிறப்பில்லாத இயற்சீர் ஆறு எனப் பத்தாகும். ஆசிரியவுரிச்சீர் ஆறாகும். இனி மூவசைச்சீர் அறுபத்துநான்கில் வெண்பாவுரிச்சீர் நான்கு எனவும் ஏனைய அறுபதும் வஞ்சி யுரிச்சீர் எனவும் கொள்ளப்படும் எனச் செய்யுட்குரிய உறுப் புக்களுள் ஒன்றாகிய சீரின் இலக்கணம் இவ்வியல் 11 முதல் 30 முடியவுள்ள சூத்திரங்களால் விரித்துக் கூறப்பட்டன. க. க. நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே. இனம் பூரண ம் : என். எனின் நிறுத்தமுறையானே அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ் ) நான்குசீர் ஒருங்கு தொடுத்து வருவதனை அடியென்று சொல்லப்படு மென்றவாறு. இதன் வேறுபாடு முன்னர்க் கூறப்படும். (ங்க) இது, முதற்குத்திரத்துள், 'யாத்த சீரே யடியாப் பெனாஅ' (தொல்-செய். 1) 1. அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன நாற்சீர்கொண்ட அடிகளே என்பதாம். 2. இவ்வடிகளின் வேறுபாடு பின்னர்க் கூறப்படும்.