பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா - க 岔雷<颚可金雳” என நிறுத்தமுறையானே சீருணர்த்தி அடியுணர்த்திய வெழுந் தான், அவற்றுள் இது நாற்சீரடி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன நாற்சீரடி (எ-று). எனவே, இருசீரானும், முச்சீரானும், ஐேஞ்சீரானும் 4.அறுசீர் முதலியவற்றானும் வருமாயினும் அவை சிறப்பில வென்றவாறாம். இருசீரான் வருவதனை என்ன அடியென்னுமோ வெனின் அடிக்கெல்லாம் எழுத்துவகையானே மேற்பெயர் கூறும், அவ்வாறே சீர்வகையானுங் கொள்ளப்படுமென்பது.? சுருங்கிய எழுத்தான் வருவன குறளடியென்றும், அவற்றின் ஏறிய எழுத்தான் வருவன சிந்தடியென்றும், இடைநின்றன அேளவடியென்றும், அவற்றின் நெடியன நெடிலடியென்றும், அவற்றினும் நெடியன கழிநெடிலடியென்றுங் கூறுமாகலான், அவ்வாறே இருசீரடி குறளடியென்றும் மூச்சீரடி சிந்தடியென்றும், நாற்சீரடி அளவடியென்றும், ஐஞ்சீரடி நெடிலடியென்றும், அறுசீர் முதலியன கழிநெடிலடியென்றுங் கோடுமென்பது. இவற்றினெல்லாம் நாற்சீரடி சிறந்த தென்றதென்னை யெனின், அளவிற்பட்டமைந்தமையானும் அது பயின்று வருதலானுமென்பது. உதாரணம். "திருமழை தலைஇய விருதிைற விசும்பின்' (பத்துப். மலைபடு!) எனவும், 'அறுகவை யுண்டி யமர்ந்தில்லா ரூட்ட” (நாலடி 1, 1} எனவும், "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்’ (கவி. 11) எனவும் மூன்று பாவினும் அளவடி வந்தவாறு. இவற்றது விகற்பமெல்லாம் முன்னர்ச் சொல்லுதும். (உ.உ) நச்சினார்க்கினியம் : இது நிறுத்தமுறையானே சீருணர்த்தி அடியுணர்த்துகின்றது. (இ-ன்.) நாற்சீர் கொண்ட அளவடியை அடியென்று சிறப். பித்துக் கூறப்படும். எ-று. 1 . அடியுணர்த்திய...அடியுணர்த்த 2. எழுத்துவகையாற்கொள்ளப்படும் அடி கட்டளையடியெனப்படும். சீர் வகையாற் கொள்ளப்படும் அடி சீர்வகையடி யெனப்படும்.