பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ష తీrg} தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனவே, ஒழிந்த நான்கடியும் சிறப்பில வாயிற்று!. 'திருமழை தலைஇய விருனிற விசும்பின்’ (மலைபடுகடாம்) 'அகர முதல வெழுத்தெல்லா மாதி” (திருக்குறள்க) "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்’ (பாலைக்கலி-உ0) என நாற்சீரடியாற் சான்றோர் மூன்று பாவுங் கூறியவாறுணர்க. குறளடியானும் சிந்தடியானும் சிறுபான்மை கூறினார். ஆய்வுரை : ‘யாத்த சீரே அடியாப்பு என இவ்வியல் முதற்குத்திரத்து நிறுத்த முறையர்னே சீர் உணர்த்திய ஆசிரியர் இவ்வியல் 31 முதல் 73 வரையுள்ள சூத்திரங்களால் செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகிய அடியின் இலக்கணம் உணர்த்துகின்றார். அடி என்பது, மேற்கூறப்பட்ட சீர்கள் இரண்டும் மூன்றும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பாகும். நாற்சீரடிதன்னையே சிறப்புடைய அடியாகக் கொண்டு எழுத்தெண்ணி வகுக்கப்படும் கட்டளையடியும், சீர்களின் மிகுதி குறைவுபற்றி வகுக்கப்படும் சீர்வகையடியும் என அடிகளை வகுத்துக் கொள்ளும் முறை இருவகைப்படும். இவ். விருவகைச் சீரமைப்புக்களும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்து வழக்கிலிருந்தன. பிற்காலத்தில் கட்டளையடியமைப்பு அருகி மறையவும் சீர்வகை யம்ைப்பே பெரும்பான்மையும் நிலை பெறுவதாயிற்று என்பதனைப் பேராசிரியரும் நச்சினார்க்கினிய. ரும் தம் உரையில் தெளிவாகக் குறித்துள்ளமை இங்கு மனங் கொளத்தகுவதாகும். இஃது இந்நூலிற் சிறப்புடைய அடியெனப்படுவது இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்.) அடியெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற் சீரடியே எ-று. இரு சீராலும் முச்சீராலும் ஐஞ்சீராலும் அறுசீர் முதலிய வற்றாலும் இயன்றுவரும் அடிகள் பலவுளவாயினும் அவை Tಾನ್ಸ್ಕ್; நான்கடியாவன: குறளடி, சிந்தடி நெடிலடி, கழி. நெடிலடி என்பன . 3 குறளடியும் சிந்தடியும் வஞ்சிப்பாவிற்கும் ஒருசார் ஆசிரியப்பாவிற்கும் உரியனவாய் வருதலின் சிறுபான்மை கூறினார் என்றார்.