பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா - உ 鼠育鲷丁岛等 பது. அது தக்கது, மற்றுப் பொழிப்பும் ஒரூஉவும் போலாத மோனை முதலிய தொடையெல்லாம் அடியிரண்டியையத் தொடுக்கல் வேண்டுமன்றே? அவற்றை அடியுள்ளனவே தொடை யும் என்ற தென்னையெனின், அற்றன்று; நாம் தொடையுறழச் சீர்கொள்வதுTஉம் இவ் வளவடிக்க ணென்பது கூறினான். ஆண்டுத் தொடை கூறும்வழி வரையாது கூறுமாகலினென்பது.? எனவே, கட்டளைப்படுப்பது உந் தொடையுறழ்தற்கு இடனா வதுTஉம் நேரடியேயெனச் சிறப்பித்தவாறு. (ங், ங்) இது நாற்சீரடியின் சிறப்புக் கூறுகின்ற்து. (இ-ள்) அந்நாற்சீரடியான் வருங் கட்டளையடிக்கண் உள்ளனவே எழுபது தளையும் பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணுற்றொரு த்ொடையும் என் வரை. யறைப்படுவன எ-து. எழுபது தளைப்பகுதியாற் கட்டளையடி யெனவுறழ்வது உம், அறுநூற்றிருபத்தைந்தடியென வரையறைப்படுவது உம், பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணுாற்றொன்றென்னும் தொடைப் பகுதி கொள்ளப்படுவது உம் நாற்சீரடியே. யாயிற்று: எனவே, நாற்சீரான்வருஞ் சீர்வகையடிக்குத் தளையுந் தொடையுங் கொள்ளின், அவை. வரையறையின்றென உணர்க, அளவடி இரண்டியைந்தும் ஒன்று வந்துந் தொடைகோடலும்.ே 1. தளைப்பகுதியாற் கட்டளையடியெனப் பெருக்கிக் காட்டுவதும் அறு நூற்றிருபத்தைந்தடியென வரையறுப்பதும் நாற்சீரடியாகிய அளவ்டியே யாதலின் அளவடியல்லாத ஏனைய அடிக்கண் தளை கொண்டால் அதுவரையறையின்றா மாகவின் ஈண்டு நாற்சீரடிக் கண்ணேயே தளைகொண்டார் ஆசிரியர். 2. ஒரடிக்கண்கொள்ளப்படும் பொழிப்பு, ஒரூஉ முதலிய தொடை விகற்பம் அன்றி மோனை முதலிய தொடைகள் யாவும் அடியிரண்டு இயையத் தொடுக்கப் படுவனவே யாயினும் அத்தொடைகட்கு நிலைக்களமாகிய சீர்கொள்வது இந்நாற் சீரடிக்கண் ஆதலின் அடியள்ளன. தளையொடு தொடை என்றார் தொல் காப்பியனார். . எனவே எழுத்தெண்ணிச் சீர்வகுப்பதற்கும் தொடைகளைப் பெருக்குதற்கும் இடனாவது நாற்சீரடியே என்றவாறு. 3. தொடையெனச் சிறப்பித்துர்ைக்கப்படுவன மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பன.