பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డ 3 శ్రీr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் சிதையாது தொடைப்பகுதியுட் பட்டவாறு காண்க. “யானுாடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் றானுரட யானுணர்த்தத் தானுணரான்-றேனுாறு” எனப் பதினான்கெழுத்தின் இகந்ததின்றேனும் தளைவகை யொன்றுதலிற் றொடைப் பகுதியுட் படாவாயிற்று. வண்டு வரகு வரகு வரகு என நின்ற வடியை மீட்டும் வண்டு வரகு வரகு வரகு எனத்தந்து தொடை கொள்ளுங்கால் ஆசிரியத்தளை தட்டு வழுவாயிற்று. கவிக்கு அன்னதோர் வரையறையின்று. அது, "வெண்சீரிற் றசை” (செய் - உகண்) என்னுஞ் சூத்திரத்தானும், "தன்சி ருள்வழித் தளைவகை வேண்டா' (செய் - ருரு) என்னுஞ் சூத்திரத்தானும் உணர்க. ஏனை அகவலும் வெள்ளையுமே வரையறைப்பட்டன. இதனானே, அறுநூற்றிருபத்தைந்தடியும் தம்முன்னர்த் தாமே வந்து தளையுந் தொடை யும் வழுப்படாமற் கொள்ளுமென்றவாறு, ஆய்வுரை : இது, கட்டளைப்படுப்பதற்கும் தொடைப்படுத்தற்கும் உரிய தோர் கருவி கூறுகின்றது. (இ-ள்) தளையும் தொடையும் ஆகிய அவை மேற்குறித்த நாற்சீரடியின்கண் வருதலன்றி அவ்வடியினைக் கடந்து வருதல் இல்லை எ-று. 1. பதினான்கெழுத்தின் இகந்ததின்றேனும் தளைவகையொன்றுதலின்மையிற் றொடைப்பகுதியுட் படாவாயிற்று என இத்தொடரினைத் திருத்துக. தளைவகை சிதையாமையாவது மாத்திரை வகையால் செப்பலோசை மாறாமையாகும். இவ்வெண்பாவின் முன்னிரண்டடியிலும் பிறபாவுக்குரிய சீருந்தளையும் சிதையாது வரினும் அடி முழுவதும் மூவசைச் சீரே பயின்றமையால் வெண்பாவுக்குரிய செப்பலோசையாகிய கட்டளைக் கூறுபாடு சிதைவுற்றமையின் தொடைப்பகுதியுட் படாவாயிற்று என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர் இருவரது கருத்தென்பது அவர்தம் உரைப்பகுதிகளாற் புலனாகின்றது. ஆகவே மேற்காட்டிய உரைத்தொடர் பதினான்கெழுத்தின் இகந்ததின்றேனும் தளைவகையொன்றுத லின்மையிற் றொடைப்பகுதியுட் படாவாயிற்று' என்றிருத்தலே பொருத்த முடையதாகும் எனக் கொள்ளவேண்டியுளது.