பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஅம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ஸ்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்தீறாக ஏறிய மூன்றுநிலத்தை யுடைத்து குறளடியென்று சொல்லுவரென்ற வாறு. எனவே, குறளடிக்கு நிலம் நாலெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்துமாம். இதற்குரிய எழுத்து முன்னர்க் காட்டுதும். (கரு) fH- =#r. ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்றம் அல்வழி யான. இளம்பூரணம் : என் - எனின். சிந்தடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு; ஒன்பதெழுத்து ஏற்றம் அல்லாத விடத்தென்றவாறு.2 எனவே ஏழும் எட்டும் ஒன்பதுமாகிய எழுத்தினாற் சிந்தடி யாம் என்றவாறாம்.8 (க.கா) 1. இனி மேற்குறித்த நாற்சீரடியாகிய அளவடியினையே எழுத்தளவினால் ஐவகையடிகளாக வகுத்துப் பெயரிடுகின்றார். நாலெழுத்துமுதல் ஆறெழுத்தீறாக எழுத்தளவினால் உயர்ந்த மூன்று திலங்களையுடையது குறளடியென்று கூறுவர் ஆசிரியர். ஆகவே குறளடிக்கு நாலெழுத்து, ஐந்தெழுத்து, ஆறெழுத்து என மூன்று நிலங்கள் உள என்பதாம். நிலத்து-நிலத்தையுடைத்து. குறளடி என்னும் எழுவாய் நிலத்து என்னும் வினைக்குறிப்புக் கொண்டது. ஏகாரம், ஈற்றசை நிலத்த' என்றும் பாடம். 2. சிந்தடிக்குத் தொடக்க அளவு ஏழெழுத்தென்பர்; அவ்வழி இரண் டெழுத்துக்கள் உயர்தல் உண்டு. எனவே ஏழெழுத்து, எட்டெழுத்து, ஒன்பதெழுத்து எனச் சித்தடிக்கு மூன்று நிலங்கள் உள என்பதாம். 3. ஈரெழுத்தேற்ற மல்வழியான’ எனப்பாடங்கொண்டனர் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய தொல்காப்பியவுரையாசிரியர்கள். ஈரெழுத்தேற்றம் அல்லாதவிடத்துச் சிந்தடிக்கு அளவு ஏழெழுத்து எனவே, ஈரெழுத்தேற்றம் உள்வழிச் சித்தடிக்கு எட்டெழுத்தும் ஒன்பதெழுத்தும் ஆம் என்பது பெறப்படுதலின், எனவே எழும் எட்டும் ஒன்பதுமாகிய எழுத்தினாற் சிந்தடியாம்' என்றார் இளம்பூரணர். எனினும் ஈரெழுத்தேற்றம் அவ்வழியான’ என்ற பாடங்கொள்ளுதலே தொல்காப்பியர் சொல்நடைக்கு ஏற்புடையதாகத் தோன் கின்றது.