பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తf శాస్త్రీ శ్రీF தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் என இதனுட் பதினேழுநிலத்து ஐவகையடியும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடியென நாற்சீரடிதானே ஐவகைப்படுமென்று அவற் றது பெயரும் முறையுந் தொகையுங் கூறினான். தொகை பதினேழ்நிலத்து ஐவகையடியென்பது எண்ணிப் பார்க்க. இப் பெயரெல்லாங் காரணப்பெயர். மக்களுள் தீரக் குறியானைக் குறளனென்றும் அவனினெடியானைச் சிந்தனென்றும், ஒப்ப மைந்தானை அளவிற்பட்டா னென்றும், அவனினெடியானை நெடியானென்றும், அவனினெடியானைக் கழியநெடியானென்றுஞ் சொல்லுப. அவைபோற் கொள்க இப்பெயரென்பது.1 (ச0) நச்சினார்க்கினியம் : இவை ஐந்து சூத்திரமும் உதாரணச்சுருக்கமும் உரையியைபும் நோக்கி உடனெழுதப்பட்டன. இவை நாற்சீரடி இத்துணைப் பகுதிப்படுமென அவற்றது பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றன. (இ - ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்துக்காறும் ஏறிய மூன்று நிலத்தையுமுடைத்து குறளடி எ-று. சிந்தடிக் கெல்லை ஏழெழுத்தொன்றுமே என்று கூறுவர், எட்டு மொன்ப தும் இரண்டுமல்லாதவிடத்து. எ-று. அளவடிக்கெல்லை பத் தெழுத்தொன்றுமே என்று கூறுவர், அதனோடொத்த பதினொன் றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினான்குமாகிய நான்கெழுத் தானாகிய நான்கு நிலனும் ஏற்றமாய் வாராதவழி, எ-று. நெடிலடிக்கெல்லை பதினைந்தெழுத் தொன்றுமே என்று கூறுவர். அதற்குப் பதினாறும் பதினேழுமாகிய இரண்டெழுத்து மிக்குவரும் நிலமிரண்டும் இயல்பென்று கூறுவர் எ-று. கழி நெடிலடிக்கெல்லை பதினெட்டெழுத்தாமென்று கூறுவர், அதற்குப் பத்தொன்பதும் இருபதுமாகிய இரண்டெழுத்தும் மிக்குவருநிலமிரண்டையும் இவ்விடத்தே பெறுமென்று சொல்லு வர் எ-து. 1. திரக்குறியான் - மிகவும் குறுமையுடையான். நெடியான் - நீண்டுயர்ந்தான் ஒப்ப அமைதலவாது, குறுமையும் நெடுமையுமின்றி நடுத்தரத்தாக ஓர் அளவிற்பொருந்தியமைதல். 2. நிலத்து - நிலத் 3. ஒத்தநாலெழுத் தேற்றலங்கடையே' என இளம்பூரணர் கொண்ட தையுடையது. பாடத்தை யொட்டியே இச்சூத்திரவுரை அமைந்துள்ளது.