பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் بی بی سی AFی நூற்பா 38 : இது, கட்டளையடியுள் நெடிலடியாமாறு கூறுகின்றது. (இ - ள்.) பதினைந்து நெடிலடியின் சிற்றெல்லையாகும், அதன் மேற் பதினாறு, பதினேழு என இரண்டெழுத்து மிக்கு வருதலும் அதன் பேரெல்லையின் இயல்பென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே, பதினைந்து, பதினாறு, பதினேழு என நெடிலடி மூன்று நிலம் பெறும் என்பதாம். நூற்பா 39 : இது, கட்டளையடியுட் கழிநெடிலடியாமாறு கூறுகின்றது. (இ - ள்.) பதினெட்டெழுத்து கழிநெடிலடியின் சிற்றெல்லை யாகும். அதன்மேல் பத்தொன்பது இருபது என இரண்டெழுத்து மிக்கு வருதலும் அதன் பேரெல்லையின் இயல்பென்று கூறுவர் ஆசிரியர் எ.று. எனவே, பதினெட்டு, பத்தொன்பது இருபது எழுத்துக் களாகிய மூன்று நிலம் பெறுவது கழிநெடிலடி என்பது பெறப் படும். ஆகவே இருபதெழுத்தின் மிக்க கட்டளையடி இல்லை யென்றவாறு. சம். சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது நேர்நிரை வஞ்சிக் காறும் ஆகும்.1 இளம்பூரணம் : என்-எனின். சீர்க்கு எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று.2 (இ-ள்) சீர்நிலை ஐந்தெழுத்தின் மிகாது நேர் இறுதி யாங் காலத்து; நிரையிறாகிய வஞ்சியுரிச்சீர்க்கு ஆறெழுத்தும் ஆகும் என்றவாறு.3 1. இதனை இரண்டு சூத்திரமாகப் பகுத்து உரை வரைவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். நேர்நிலை வஞ்சிக்கு என்பது அவர்கள் கொண்ட பாடம். 2. கட்டளையடியாகிய நாற்சீரடிகளுக்குக் கூறிய இவ்வெழுத்துவரையறை சீர் வகையடிகளில் குறளடியானும் சிந்தடியானும் வரும் வஞ்சியடிகளுக்கும் பொருந்துமாறு வஞ்சியுரிச் சீர்க்குரிய எழுத்து வரையறை கூறுகின்றது. 3. சீராம் நிலைமைக்கண் நேரீற்று வஞ்சியுரிச்சீராயின் அச்சீர் ஐந்தெழுத்தினைக் கடந்து வருதல் இல்லை. நிரையிற்று வஞ்சியுரிச் சீராயின் ஆறெழுத்துக்களால் வருதலும் உண்டு. எ-று