பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ářf e#3, E2.- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனக் குற்றியலுகரமும் வருமொழியைச் சிதைத்துக்கொள்ளப் படாவென்பது கூறினானாகலினென்பது.1 (ச க) நச்சினார்க் திரிையம் : இது மேலெழுத் தெண்ணி அடி வகுத்த கட்டளையடிக்குச் சீரும் எழுத்தெண்ணி வகுக்கின்றது. (இ - ள்.) ஒரு சீரினது நிலைமைதான் ஐந்தெழுத்து இறந்துவராது. எ-று. பெருமைக்கு எல்லைகூறி வரையறுப்பவே, சிறுமைக்கு எல்லை வரையறைப்படாது; ஒன்று முதலாக வருதல் பெற்றாம். அசைநிலையிற்2 பிரித்துநிற்றலிற் றானே யென்பது பிரிநிலை யேகாரம். அவற்றையுஞ் சீரென அடக்குக எனின் :- அவை இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றவேண்டா; இங்ங்ணம் பாற்படுப்பன வற்றைச் சேரக்கூறலின் மயங்கக்கூறலென்னுங் குற்றமாம். இனி அவை மூன்றெழுத்தி னிகவாமை உரையிற் கொள்க. அச்சீர்கள் வருமாறு :- நுந்தையும் வண்டும் ஒரெழுத்துச் சீரென்ப; தேமா, ஞாயிறு, போதுபூ, போரேறு, மின்னு, வரகு என இயைந்த ஆறும் ஈரெழுத்துச் சீராகும் என்ப; புளிமா, பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகு தீ, மாசெல்வாய், நீடுகொடி அரவொடுகூட மூவெழுத்துச்சீர் பதினொன்றாகும்; கணவிரி, பெருநாணு, காருருமு, உருமுத்தீ, மழகளிறு, மாவருவாய், புலிசெல்வாய், நாணுத்தளை, உரறுபுலியொடு ஒன்பதுசீரும் நாலெழுத்துச்சீராகு மென்ப, நரையுருமு, புலிவருவாய், விரவுகொடி மூன்றும் ஐயெழுத்துச் சீராகுமென்ப. ‘எழுத்தளவெஞ்சினும் (செய்-சங்) என்னுஞ் சூத்திரத்தான் இங்ஙனங்காட்டினாம். ஆகச்சீர் முப்பத்தொன்றாம். 1. துந்தை” என்பது குற்றுகரமுதன்மொழிபென்பது எழுத்தறிகாரத்திற் கூறப்பட்டமையானும், இங்குச் செய்யுளியலில் முற்றியலுகரமு மொழி சிதைத்துக்கொளாஅ என்பு உண்மையால் அதனைக்குற்றுகரமாகவே ஆசிரியர் கொண்டமையானும் 'நுந்தை என்புழிக் குற்றுகரத்தை ஒற்றியற்றென்று எண்ணாது விடவே அஃது ஒரெழுத்துச் சோவதன்றி ஈரெழுத்துச் சீராகாதென்பதாம். 2. அசைநிலை என்றது. ஒாசையாகிய அசைச்சீரினை. அவற்றையும் - அவ்வோரசைச் சீர்களையும்.