பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சம் &T <9ßNo fH_. பேராசிரியம் : இஃது, ஒழிந்த வஞ்சிப்பாவினுள் வருஞ்சீர் இத்துணை யெழுத்திறவாதென்கின்றது. நேர்நிலை வஞ்சியென்பது சமநிலை வஞ்சி; அஃது இருசீரான் வருதலிற் சமநிலைவஞ்சியெனப் பட்டது முச்சீரான் வருவதனை வியநிலைவஞ்சி (26) யென்பவாகலின்.1 (இ-ள்.) இருசீரடிவஞ்சியுள் ஒரு சீர் ஆறெழுத்தாகவும் பெறும் (எ-று.) இதற்கு, மேனின்ற அதிகாரத்தாற் பெருக்கத்திற்கெல்லை கூறினான், சுருக்கத்திற்கும் வரையறையுடைமையின், அது முன்னர்ச் (46) சொல்லுதும் ? எனவே, அறுபது வஞ்சியுரிச் சீருள்ளும் ஆறெழுத்தான் வருஞ் சீருங் கட்டளையடியாய் வரப் பெறுமென்றவாறு. உம்மை இறந்தது தழி இயிற்று 3 "தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே. (தொல், செய் 46) என்றதனான், ஒன்றும் இரண்டும் எழுத்தான் வருதலொழித்து, ஒழிந்த எழுத்தான் ஆறெழுத்தளவும் வஞ்சியுரிச்சீர் வருமென் பது கொள்ளப்படும். இதனை எச்சவும்மை யென்பார் ஏழெழுத் தானும் வஞ்சியுரிச்சீர் வருமென்ப; அங்ங்னங் கொள்ளின் இரண்டுசீராற் பதினான்கெழுத்துளவாகிய செல்லும்; செல்லவே, 'குறளடி முதலா வளவடி காறும் உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப.” (தொல். செய். 57) என்பதனொடு மாறுகொள்ளுமென்பது.4 1. நேர்நிலைவஞ்சியென்பது இருசீரடிவஞ்சிப்பா. இது சமனிலை வஞ்சியெனவும் குறளடி வஞ்சிப்பா எனவும் வழங்கப்பெறும். முச்சீரடியால் வருவது வியநிலை வஞ்சி யெனப்படும். இதனைச் சிந்தடிவஞ்சிப்பா எனவும் வழங்குவர். 2. வஞ்சிச்சீரின் எழுத்துச் சுருக்கத்திற்கெல்லை தன்சீரெழுத்தின் சின்மைமூன்றே (செய். 46) எனப் பின்னர்க் கூறப்படும். 3. ஆறுமாகும்’ என்புழி உம்மை முற்கூறியப்டி ஐந்தெழுத்தாதலேயன்றி ஆறெழுத்துமாகும் எனப் பொருள் தந்து நின்றமையின் இறந்தது தழிஇய எச்சவும்மையாகும். - 4. ஆறும் என்பதனை எச்சமாகக்கொண்டு ஏழெழுத்தானும் வஞ்சியுரிச் சீர் வரப்பெறும் என்பாருமுளர். அங்ங்னம் குறளடியில் வஞ்சிச்சீர் ஏழெழுத்தானும் வருமெனக் கொண்டால் இருசீரால் ஆகிய அவ் வஞ்சியடியிற் பதினான்கெழுத்துளவாகும். அங்கனம் வருதல் நாலெழுத்து முதல் பதினான்கெழுத்த்ளவும் உறழும் நிலை வஞ்சியடிக்கு இல்லையென இவ்வியல் ரு எ-ஆம் சூத்திரத்தில் ஆசிரியர் கூறிய வரையறையொடு மாறுகொள்ளுமாதலின் வஞ்சிச்சீர் ஆறெழுத்தின் மேற்படவருதல் இல்லையென்க.