பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sts 33) #F* தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "தன்சி ரெழுத்தின் சின்மை மூன்றே (தொல். செய் 46,) என்புழி, இவற்றிற்கு உதாரணங் காட்டுதும். (°2_) நச்சினார்க்கினியம்: இது வஞ்சிப்பாவினுள் வருஞ் சீர்க்கு எழுத்துவகை கூறுகின்றது. இ-ள். சமநிலை வஞ்சிக்கு ஆறெழுத்துமாம். எ-று அஃது இருசீரான் வரும்; மூச்சீரான் வருவது வியநிலை. வஞ்சி. இறுதியதிகாரத்தாற் பெருமைக்கெல்லை கூறினார்; சிறுமைக்கெல்லை மேற்கூறுப. எனவே, ஆறெழுத்தி னிகந்தன கட்டளையடிக்காகா வென உணர்க. உம்மை இறந்தது தழிஇயிற்று, ஐந்தேயன்றி ஆறுமாமென்றலின். அவை முற்கூறிய உதாரணங்களுட் காண்க. ஆய்வுரை : இது, மேல் எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட கட்டளையடியுட் பயிலுஞ் சீர்க்கு எழுத்து வரையறை கூறுகின்றது. (இ ஸ்) நேரீற்றுச் சீர்களில் எழுத்துக்கள் நிற்கும் நிலை ஐந்தெழுத்தின் மிகாது. நிரையிறுதியாய் வரும் வஞ்சியுரிச்சீர்க்கு ஆறெழுத்தும் ஆகும் எாறு. இச்சூத்திரத்தின் இரண்டாமடியில் நேர்நிரை’ எனப்பாடங் கொண்டு, நேர் சீர்நிலைதானே ஐந்தெழுத்து இறவாது; நிரை வஞ்சிக்கு ஆறுமாகும் என இருதொடராய் இயைத்துப் பொருள் கொண்டார் இளம்பூரணர். இரண்டடிகளாலியன்ற இச்சூத்திரத் தில் வரும் "சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது” என்னும் முதலடியை ஒரு சூத்திரமாகவும், 'நேர்நிலை வஞ்சிக்கு ஆறு மாகும்’ என்னும் இரண்டாமடியினை மற்றொரு சூத்திரமாகவும் பிரித்து இரண்டு சூத்திரங்களாக்குவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். இரண்டாமடியில் நேர்நிலைவஞ்சி' என்பது இவ்விருவரும் கொண்ட பாடம். இங்கு நேர்நிலை வஞ்சியென்பது சமநிலை வஞ்சி; அஃது இருசீரான் வருதலிற் சமநிலை வஞ்சியெனப் 1. இவ்வியல் சிக-ஆம் சூத்திரத்தாற் சிறுமைக்கெல்லை கூறப்பட்டது.