பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சக ளகரு பட்டது. முச்சீரான் வருவதனை வியநிலைவஞ்சி என்ப” எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தரும் விளக்கம் இங்கு நினைவுகூர்தற்குரியதாகும். சக எழுத்தள வெஞ்சினும் சீர்நிலை தானே குன்றலும் மிகுதலும் இல்லென மொழிப. இளம்பூரணம் : இதுவுஞ் சீர்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்,) ஈண்டோதப்பட்ட அடிகள் பலதொடுக்கும்வழி ஒரடிக்கோரடி எழுத்தளவு குறைந்து வரினுஞ் சீர்நிலை நான்கின் இழிதலும் மிகுதலுமில்லை என்றவாறு. (சக) பேராசிரியம் : இது, மேற்கூறிய சீரெல்லாவற்றிற்கும் பொதுவிதி. (இ - ள்) ஒருசீர் இரண்டுமுதற் பதினெட்டு ஈறாகப் பல நிலைமைப்பட்டுப் பல சீராகிச் செய்யுளுள் வருமாற்றாற் றத்த மெழுத்துக் குறைந்தும் மிகுந்தும் அளவிறப்பினும் அவ்வச் சீரெனப்பட்டுச் செய்யுளுள் ஒத்த ஒசை இருவகையும் ஒரு தன்மையவேயாகச் சுருங்கிற்றும் பெருகிற்றுமில்லை (எ . று.) எனவே அவை எழுத்தெண்ணி அடிவகுக்கு மாற்றான் இருநிலைமையும், இரண்டிறந்த பலநிலைமையும் படுவன படும். அவ்விடத்து எழுத்திற்கல்லது சுருக்கப்பெருக்கமில்லை யென்ப து உங் கூறியவாறாயிற்று. தான் என மிகுத்துச்சொல்லியவத னான் அசைச்சீர்க்கும் அவ்வாறே கொள்ளப்படும். தளைவகைக் குரியவென மேலோதிவந்த சீர் பதினாறும் அசைச்சீரிரண்டு மெனப் பதினெட்டினுள்ளும் இயற்சீர் பத்தினுட் புளிமாவும் வெண்சீர் நான்குமென ஐந்தும் ஒருநிலைமையவேயாம். ஒழிந்த சீர் பதின்மூன்றும் இருநிலைமையெய்தி இருபத்தாறாம். ஆகச் சீர் முப்பத்தொன்றாமென்பது. அவற்றுக்குதாரணம் : 1. எஞ்சுதல் குறைதல். 2. ஒருசீர் இரண்டு முதல் எட்டீறாக என்றிருத்தல் வேண்டும். 3. சீரின் எழுத்துப்பெருக்கமும் எழுத்துச் சுருக்கமும் ஆகிய இருதிறமும். ஒருதன்மையவேயாதல் ஒசையால் ஒருதன்மையவாய் ஒத்திருத்தல். 4. எழுத்திற்கல்லது ஒசைக்குச் சுருக்கமும் பெருக்கமும் இல்லை.