பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க டு எழுத்து யாண்டு மின்மையானும், பொருள் பெறநின்ற அசையா னாகிய தேமாவென்னுஞ் சீரும் அவ்வசைச் சிறப்பினாற் சிறப் புடைச் சீரெனப்படாமையானும் சாத்தனெனத் தன்பொரு ளொடு தான் துணிந்து நின்றவழி அதுவுஞ் சிறப்புடைச் சீரெனவும் படுமாதலானுமென்பது. அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவதோர் உறுப்பு. யாப்பென்பது, அவ்வடிதொறும் பொருள்பெறச் செய்வதோர் செய்கை. மர பென்பது, காலமுமிடனும்பற்றி வழக்குத் திரிந்தக்காலுந் திரிந்த வற்றுக்கேற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை. மற்றுச் சொல்லோத்தினுட் கூறிய மரபிற்கும் மரபியலுள் உரைப்பன வற்றுக்கும் இதற்கும் வேற்றுமையென்னையெனின், இது செய் யுட்கே உரித்து; அவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வென்பது; அல்லது உம் அவற்றது வேறுபாடு முன்னர் அகத்திணையியலுள் கூறிவந்தாம்! துக்கென்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல். தொடைவகையென்பது, தொடைப் பகுதி பலவுமென்றவாறு : அவை வரையறையுடையனவும் வரையறையில்லனவுமென இருவகைய. இப்பகுதி யெல்லாம் அடியாற் கோடலின் அடிக்கும் இஃதொக்கும். நோக் கென்பது, மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து 1. அசையினும் சீரினும் அன்னோர்காணும் சிறப்பும் சிறப்பின்மையும் ஏற்புடையனவல்ல என்பது பேராசிரியர் கருத்தாகும், 2. சொல்லதிகாரத்தும் மரபியலிலும் கூறப்படும் மரபுகள் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாகவுரியன. செய்யுளுறுப்பாகிய மரபென்பது செய்யுளுக்கே யுரியதாகும். இவ்வியலுக்குப் பேராசிரியர் உரைவரைந்துள்ளார் என்பது இதனாற் புல்னாம், 3. நாற்சீரடிதன்னையே எழுத்தெண்ணிப் பதினேழ்நிலத்து ஐவகையடிகளாகப் பகுத்துரைக்கும் அடிகளிற் கொள்ளப்படும் தொடைவகை வரையறையுடையன. நாற்சீரினிகந்து ஐஞ்சீரடி முதலாகவரும் சீர்வகை அடிகளிற் கொள்ளப்படும் தொடைகள் வரையறையில்லாதன. 4. இவ்வியலில் நாற்சீரடி தன்னையே எழுத்தெண்ணிக் கட்டளையடிகளாகப் பகுத்துரைக்கப்படும் அடிகள் வரையறையுடையனவாகவும் ஐஞ்சீரடி முதலாக வுள்ள சிர்வகையடிகள் வரையறையில்லாதனவாகவும் வருதலின் அடிக்கும் இஃது ஒக்கும் என்தார்.