பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சக ĝ–60F fB தம் அளவிறந்துவரினும். சீர்நிலை...... மொழிட எ-து அவை அவ்வச்சீரெனவேபட்டுச் செய்யுளுள் அவ்வப்பாக்களின் ஒசையை யுணர்த்தி, ஒருதன்மையவாயே நிற்கும், சுருக்கப் பெருக்கம் இன்றென்று கூறுவர் ஆசிரியர். எ - று. எனவே, அவை கட்டளையடிக்கு எழுத்தெண்ணி அடிவகுக்கு மாற்றான், இயற்சீரும் உரிச்சீரும் ஒருநிலைமைப்படுதலும், வஞ்சிச்சீர் பலநிலைமைப்படுதலும் உடையவேனும், அவ்வெழுத் திற்கல்லது சீர்க்குச் சுருக்கப் பெருக்கமின்றென்று கூறியவாறா யிற்று. தானே என்றதனான் அசைச் சீர்க்கும் இருநிலைமை கொள்க. அவை இருநிலைமைப்படுமாறு: 'இயலசை மயங்கிய வியற்சீர் நான்கனுட் புளிமா வொழிந்த வியற்சீர் மூன்றும் நுந்தை தேமா ஞாயிறு பாதிரி வலியது கணவிரி யெனவிரு வகையாய் இருமூன் றாக வியம்பினர் புலவர்" நுந்தை - ஒரெழுத்துத் தேமா, ஞாயிறு - ஈரெழுத்துப்பாதிரி, வலியது - மூவெழுத்துக்கணவிரி: இவற்றுட் குற்றுகரம் எழுத் தெண்ணப்பெறாமையான் அலகு பெறுதலின், இருநிலைமை எய்திற்று. உரியசை மயங்கின இயற்சீராறும், போதுபூ, மேவுசீர், விறகுதி, உருமுத்தி, போரேறு, நன்னாணு, பூமருது, காருருமு, மழகளிறு, நரையுருமு, கடியாறு, பெருநாணு என்று ஈருகரத் தான் ஈராறாகும். இவை குற்றுகர முற்றுகரங்களான் இரு நிலைமை எய்தின. இருவகை இயற்சீராய பதினெட்டு, புளிமா வோடு பத்தொன்பதாகும்; ஆக இயற்சீர் பத்தொன்பது: இவற்றுள், “நுந்தை தேமா புளிமா நேரீறு மன்றி வந்த வீரெண் சீராய்ப் பாதிரி கணவிரி யாகிநின் றவையுள் ஒன்றி வந்தன வாசிரி யத்தளை ஒன்றா தனவே வெண்டளை யாகும்” 'முன்னிரை பீற்ற வாசிரிய வுரிச்சீர் நீடு கொடியே நாணுத் தளையே உரறு புவியே விரவு கொடியென 1. அலகுபெறுத லின்மையின்' என்றிருத்தல் வேண்டும்,