பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச.உ உளரு சி. உ. உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான. இளம்பூரணம் : என்-எனின். மேற் செல்லப்பட்ட அடிக்குரிய எழுத்து வரை யறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள் ) உயிரில்லாத எழுத்தும் எண்ணப்படா, உயிர் போல இயக்கமின்மையான் என்றவாறு.1 உம்மை எச்சவும் மை யாதலாற் குறுகிய வுயிர்த்தாகிய குற்றியவிகரமும் குற்றியலுகரமும் எண்ணப்படா என்று கொள்க. எனவே, எண்ணப்படுவன உயிரும் உயிர்மெய்யுமாகி ஒரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும்.2 (ச உ) இது, மேல் எழுத்தெண்ணிச் சீர்வகுத்த முறையானே ஒற்றும் ஆய்தமுங் குற்றுகாமும் ஒருங்கெண்ணப்படுதலெய்தின. வற்றை விலக்கினவாறு. (இ - ள்.) உயிர்இல் எழுத்தும் எண்ணப்படாஅ-தத்தம் ஓசை இனிது விளங்கத் தத்தந் தன்மை யான் ஒலித்தற்றொழி. வில்லாத எழுத்துக்கள் ஈண்டெண்ணப்படா; உயிர்த்திறம் இயக்கம் இன்மையான - அங்ஙனம் எண்ணப்படாதவும் எழுத் தெனப்படுதலிற் சிறிது நாப் புடைபெயருந் துணையான் ஒலித்த லும் மொழிசார்ந்து ஒலித்தலும் உடையவன்றே? அங்ங்னம் 1 உயிர்த்திறம் இயக்கம் இன்மையான், உயிரிஇல் எழுத்தும் எண்ணப். படாஅ என இயையும். உயிர்த்திறம் இயக்கம் ஆவன, நா சிறிது புடைபெயரும் அளவில் தனிநின்று ஒலித்தலும் மொழிசார்ந்து ஒலித்தலும் ஆகும். இங்ங்னம் செய்யுட்களில் தனி நின்றும் புடைபெயர்ந்தும் ஒலிக்குந் திறம் உயிர்க்கும் உயிர் மெய்க்குமன்றித் தனி மெய்கட்கின்மையின் அவை உயிரில்லெழுத்தெனப்பட்டன. 2. உயிரில்லெழுத்தும்' என்புழி உம்மை யெச்சவும்மையாதலால், ஒற்றுப்போன்று குறுகியவுயிராகிய குற்றியலிகாமும் குற்றியலுகரமும் (ஆய்தமும்) எண்ணப்படா என்றார். எனவே கட்டளையடிக்கண் எழுத்தென எண்ணப்படுவன ஒரு மாத்திரையிற் குறையாதனவாய் உயிர்த்திறமியக்கமுடையவாகிய உயிரும் உயிர்மெய்யுமே என்பது புலனாம். 3. உயிர் இல் எழுத்து-உயிர்த்தல் தொழில் இல்லாத ஒற்றும் குற்றுகரமும். உயிர்' என்றது. இங்கு முதனிலைத் தொழிற்பெயராய் நின்றது. உயிர்-உயிர்த்தல்: ஒலித்தல்.