பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சச இ.கி. கன் நச்சினார்க்கினியம் : (இஃது) அதிகாரத்தானின்ற வஞ்சியடியாமாறு கூறுகின்றது. (இ-ஸ்.) முற்கூறிய சமநிலை வஞ்சியினடி இருசீரையுடைத் தாகிவரும். எ-று • , ஏகாரம் பிரிநிலை; சிறப்பில்லா வியநிலைவஞ்சியினின்றும் பிரித்தலின். வியநிலை வஞ்சிக்குக் கட்டளை யின்று. இங்ங்ணம் கூறவே, வஞ்சியடியும் ஒருவாற்றான் உறழப்படுமாயிற்று. அது 'குறளடி முதலா (ருஎ) என்பதனுட் காட்டுதும். இங்ங்ணம் வஞ்சியுறழாவிடிற் குன்றக் கூறலென்னுங் குற்றந்தங்கும். ஆய்வுரை : வெண்பா, ஆசிரியம், கலி என்னும் மூவகைப்பாக்களுக்கும் உரிய நாற்சீரடியாகிய அளவடியினையே குறளடி முதலாக ஐவகைப்படுத்து உணர்த்திய ஆசிரியர், இச்சூத்திரத்தால் வஞ்சிப்பாவுக்குரிய அடியின் இலக்கணம் உணர்த்துகின்றார். (இ-ள்) வஞ்சிப்பாவுக்குரிய அடி இரண்டு சீர்களையுடையதாகும் எ-று. உ-ம்: 'வான்பொய்ப்பினுந் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி' (பட்டினப்பாலை) என வஞ்சியடி இருசீரால் இயன்றமை காண்க. இருசீரடிகளால் இயன்ற குறளடிவஞ்சிப்பா சமனிலை வஞ்சிப்பா எனவும் வழங்கப் பெறும். ச. ச. தன்சீர் எழுத்தின் சிறுமைக் மூன்றே. இளம் பூரணம் : என்-எனின். வஞ்சியுரிச்சீர் குறைந்தநிலை உணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்.) வஞ்சியுரிச்சீரின் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப்படும். சமநிலைவஞ்சி - இருசீரடிவஞ்சி. - வஞ்சியடியே' என்புழி ஏகாரம். , வியநிலைவஞ்சி - முச்சீரடிவஞ்சி, "சின்மை' என்பது பேராசிரியர் உரையிற் கண்ட பாடம் மேலைச் சூத்திரத்து வஞ்சியடி என அதிகாரப்பட்டமையின் ஈண்டுத் "தன்சீர் என்றது அவ்வடிக்குரிய வஞ்சியுரிச்சீரை யெனக்கொண்டார் இளம்பூரணர்.