பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனவே, மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் வஞ்சியுரிச்சீ ரெழுத்தென்றவாறாம். (ச ச) GLIym forfu uut : இது, மேற்கூறிய வஞ்சியடிக்கண்வரும் இருசீர்க்கும், பெருமைக் கெல்லை, நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்’ (தொல். செய். 42) என்று கூறினான்; ஈண்டு அவை மூன்றெழுத்திற் சுருங்கா வென்ச் சுருக்கத்திற் கெல்லையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வஞ்சியடிச்சீர் மூன்றெழுத்துச் சிறுமை பெறும் (எ - று.) சிறுமைக்கெல்லை வஞ்சிச்சீர்க்கல்லது இன்மையின் இதனை, 'வஞ்சி யடியே யிருகீர்த் தாகும்’ (தொல்-செய்-45) என்றதன்பின் வைத்தானென்பது ? இது முச்சீர்க்குரித் தன்மையானும் மூன்றெழுத்தி னிழிந்துவரும் வஞ்சியுரிச்சீர் பெரும்பான்மையும் முச்சீரடிக்கு உரிமையானும் இதன்பின், 'முச்சி ரானும் வருமிட னுடைத்து’ (தொல். செய், 47) என்றானென்பது. "கொன்றுகோடுநீடு கொலைக்களிறுகடாம்” என்புழி, இருசீரடிமுதற்கண் மூவெழுத்தான் வஞ்சியுரிச்சீர் வந்தது. பிறவும் அன்ன. நுந்தைகாடு’ என ஈரெழுத்தானும் வஞ்சியுரிச்சீர் வந்தவாறு.3 (சக.) நச்சினார்க்கினியம் : இது முன்னர்ச் சமநிலைவஞ்சிக்குப் பெருமைக் கெல்லை கூறினமையின் ஈண்டுச் சிறுமைக்கெல்லை கூறுகின்றது. (இ-ள்.) அவ்வஞ்சிச் சீருக்கு எழுத்தின் சிறுமை மூன்றே, எறு. 1. சின்மை - சிற்றெல்லை; ஈண்டு எழுத்துக்களது எண்ணின் சுருக்கத்தை யுணர்த்தியது. 2. மூன்றெழுத்துச் சிற்றெல்லையென்பது இருசீரடி வஞ்சிச்சீர்க்கல்லது முச்சீரடி வஞ்சிச்சீர்க்கு இன்மையின் இதனை வஞ்சியடியே யிருசீர்த்தாகும்’ என்ற சூத்திரத்தின் பின் வைத்தார். 3. இத்தொடர் உரைப்பகுதியொடு தொடர்பின்றியுளது. ஏடு பெயர்த்தெழுதுவோராம் பின்னர்ச் சேர்க்கப்பெற்றிருத்தலும் கூடும்.