பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

éfrr தொல்காப்பியம் - பொருளதிகாரம்-உரை வளம் இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஒசை அளவியலென்பது, அப் பாவரையறை. திணையென்பது, அகம் புறம் என்று அறியச் செய்தல், கைகோளென்பது, அவ்வத்திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல் : அது களவுங் கற்பும். கூற்றுவகையென்பது, அச் செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல். இவை யென்பது பாடமாயின், எண்ணிய மூன்றனையுந்தொகுத்தவாறே பிறிதில்லை. கேட்போரென்பது இன்னார்க்குச் சொல்லுகின்றது. இதுவெனத் தெரித்தல். கன னென்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற் குறி முதலாயினவும் உணரச்செய்தல். மற்றுத் தன்மை முன் னிலை படர்க்கையுமாம். காலவகையென்பது, சிறுபொழுது பெரும்பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின. 超熊鼓舞 னென்பது, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல். மெய்ப்பா டென்பது சொற் கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல். எச்சவகையென்பது, (518) சொல் லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல்: அது கூற்றினுங் குறிப்பினும் வருதலின் வகையென்றான், முன்ன மென்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோருந் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல்.2 பொருளென்பது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப் படுவதோர் பொருண்மை.3 துறைவகையென்பது, முதலுங் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன்பாற் படுமென்று ஒகு துறைப்படுத்தற் கேதுவாகியதோர் கருவி அச்செய்யுட் குளதாகச் செய்தல்; அவையும் பலவாதலின் வகையென்றா னென்பது. மாட்டென்பது, பல்வேறு பொருட்பரப்பிற் றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் 1. கூற்றிவையெனா' என்பது பாடமாகக்கொள்ளுமிடத்து இவையென்பது திணை கைகோள் கூற்று என்னும் மூன்றனையும் தொகுத்துச்சுட்டிய சுட்டுப்பெயராகக் கொள்ளுதல் வேண்டும். 2. கூறுவாரும் கேட்பாரும் இன்னார் என வுணர் தற்கேற்ற சொல்லமைப்புச் செய்யுளில் அமையச் சொல்லுங்கருத்தமைதி முன்னம் என்னும் செய்யுளுறுப்பாகும். முன்னம் - கருத்து, 3. செய்யுள் செய்யும் புலவன் தன்புலமைத் திறத்தால் தானே வகுத் துரைக்கும் பொருட்கூறு.