பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證。蕊* தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இதுவும், அதற்கெய்தியதோர் விதி. (இ - ள்.) மேற்கூறிய வஞ்சியடி இரண்டன்கண்ணும் நான்கசையுங் கூனாகி வரப்பெறும் (எ - று.) எனவே, அடியெனப்பட்ட இருசீர்க்கும் முச்சீர்க்கும் அசை கூட்டிக்கொண்டு சொல்லப்படாவென்றவாறு. அவை, "வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப்போன்றன’ (புறம் 4) எனவும், “அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன.” எனவும், “வண்டு, மலர்சேர்ந்து வரிபாடின’’ எனவும், “களிறு, கதவெறியாச் சிவந்துராய் துதிமழுங்கிய வெண்கோட்டா னுயிருண்ணுங் கூற்றுப்போன்றன’’ எனவும் முறையே நான்கசையுங் கூனாயின. இனி, இடையும் இறுதியுங் கூனா மென்பாருமுளர். அது வஞ்சித்துரக்கு இரண்டுகொள்ளவருமாயின் அமையுமென்பது.8 என்றார்க்கு, "வாள் வலந்தர” என்பதனை ஒரு சீராகக் கோடுமெனின் 'யாத்தசீர்” என்றதனான் வலந்தருதல் வாண்மேற்சென்று, வருகின்ற பயனிலை நின்று வற்றுமென்பது.4 (ச அ) 1. வஞ்சிப்பாவில் அசை சுனாகி வருமிடத்து அதனை இருசீரடியோடும் முச்சீரடியோடும் கூட்டி முறையே சிந்தடியாகவும் நேரடியாகவும் சொல்லக்கூடாது என்பதாம். 2. இக்கருத்து நச்சினார்க்கினியருரையிலும் யாப்பருங்கலவிருத்தியிலும் இடம் பெற்றுளது. 3. அங்ஙனம் வஞ்சியடியின் இடையிலும் கூன்வருதல் வஞ்சித்தாக்கு இரு சீரடியாய் நின்று இரண்டுகொள்ளவருமாயின் பொருந்தும் என்பதாம். 4. இங்கெடுத்துக்காட்டிய புறப்பாடலில் அடிமுதல் வந்த கூனாகிய வாள்' என்பதனைப் பின்வந்த வலந்தர' என்பதனோடு இயைத்து வாள்வலந்தர என ஒருசீராகக் கொண்டால் யாத்தசீர் என்றதற்கேற்ப 'வலத்தருதல் வினைமுதல்