பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சசு உகரு நச்சினார்க்கினியம் இதுவும் அதற்கெய்தியதோர் விதி. இ-ள். அவ்விரண்டடியின்கண்ணும் நான்கசையும் கூனாய்வரப்பெறும். எ-று உ-ம்: "வாள் வலந்தர மறுப்பட்டன" (புறம் ச) இதனை வாள்வலந்தர என ஒருசீர்! யாத்தசீர் (செய்க) என்றத னான் வலந்தருதல் வாள்மேற் சென்று மறுப்பட்டன என்னும் பயனிலை நின்றுவற்றுதலின் வாள் என நேரசை கூனாயிற்று. 'அடி, யதர்சேறவி னகஞ்சிவந்தன’’ 'வண்டு, மலர்தேர்ந்து வரிபாடின’’ 'களிறே2 கதவெறியாச் சிவந்துராஅய்” (புறம்-ச) என நான்கசை கூனாயிற்று : களிறே என்ற ஏகாரம் அசையா. தலிற் பொருளின்றி நின்றது : இனி இச்சூத்திரம் பொதுவாய் நிற்றலிற் றுக்கிரண்டுபட இடையினுங் கடையினுங் கூனாய்நிற்பனவுங் கொள்க. உ-ம். 'கலங்கழாஅலிற், றுறை, கலக்கானாதே எனத் துறையென இடைக்கண் நிரையசை கூனாயிற்று. 'மாவழங்கலின் மயக்குற்றன, வழி இதனுள் வழியென இறுதிக்கண் நிரையசை கூனாயிற்று. ‘தேரோடத் துகள்கெழுமின, தெருவு’ என இறுதிக்கண் நிரைபசை கூனாயிற்று ஒழிந்தன வந்துழிக் காண்க. ஆய்வுரை : இது, வஞ்சியடிக்குரியதோர் மரபு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட இருசீரடியும் முச்சீரடியுமாகிய இருவகையிடத்தும் அசை கூனாகிவரும் எ-று. முன்பக்கத் தொடர்ச்சி மேற் செல்லாது கருவியாகிய வாண்மேற்சென்று, செவ்வானத்து வனப்புப் போன்றன என அதன் பயனிலைக்குரிய எழுவாய் புலப்படுதலின்றி வறிதே நிற்கும் என்பதாம். 1. இதனை வாள்வலந்தர' என ஒரு சீராகக் கொள்ளின் , யாத்தசீர்’ (செய்-க) என்றதனான் வலந்தருதல் வாள்மேற் சென்று மறுப்பட்டன என்னும் பயனிலை நின்று எழுவாயின்றி வற்றுதலின் வாள்' என நேரசை கூனாயிற்று' எனப் பேராசிரியர் உரை நோக்கி இவ்வுரைத் தொடரில் விடுபட்ட சொற்களை நிரப்பிக் கொள்ளுதல் வேண்டும். களிறு என்றிருத்தல் வேண்டும். இத்தொடர் பின்வந்தோராற் சேர்க்கப் பெற்றிருத்தல் வேண்டும்.