பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$a Lü☽ᏯᎮr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அசை கூனாகும் என்றது நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நால்வகை அசைகளுள் ஒன்று கூனாகி வரும் என்பதாம். அடிமுதற்கண் பாவினது பொருளைத் தழுவித் தனியே நிற்கும் சொல் கூன் என்று வழங்கப்படும்.

    • ←Ꭲ . சீர்கன் ஆதல் நேரடிக் குரித்தே. இளம்பூரணம் : என்- எனின். இதுவுங் கூனாகுமிடன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சீர்முழுதுங் கூனாகி வருதல் அளவடிக் குரித்து என்றவாறு.

நேரடி என்றதனான் வெண்பாவினும் ஆசிரியத்தினுங் கலியினுங் கொள்ளப்படும்.: அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே. (குறுந் உகக) இது ஆசிரியத்திற் கூன், "உதுக்காண் சுரந்தானா வண்மைச் சுவர்னமாப் பூதன் பரந்தானாப் பல்புகழ் பாடி-இரந்தான்மாட் டின்மை அகல்வது போல இருள்நீங்க மன்னும் அளிதேர் மழை.” (யாப். வி. பக் கருகr) இது வெண்பாவிற் கூன். "நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் வரீஇய அம்பு தெரிதியே.” (கலித்-எr) இது கலிப்பாவிற் கூன் {rణాr) Gu ym Frfw I tid : இஃது, எய்தாத தெய்துவித்தது. (இ - ள்.) தளைவகையானுஞ் சீர் வகையானும் நின்ற நேரடிக்காயின் அசை கூனாகாது சீர்கூனாகும் (எ - று.) "அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே” (குறுந் 216) எனவும், 1, நேரடி-அளவடி: நாற்சீரடி சீர் கூனாதல் நேரடிக்கு உரித்து’ என்றதனால் நாற்சீரடிப் பாக்களாகிய வெண்பா, ஆசிரியம், கலி என்னும் மூன்று பாவிலும் சீர் சுனாகி வரும் என்பதாம்.