பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச எ @.岛猛T 'உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவரன்மாப் பூதன்' எனவும், அவனுந்தா, னேன விதணத் தகிற்புகை யுண்டியங்கும் (கலி-39) எனவும் இவை மூன்றுபாவினும் அளவடிக்கட் சீர் கூனாயின வாறு. என்றார்க்கு, நேர்பசை நிரைபசைகளையுஞ் சீர்நிலை பெறு மென்றானாகலின் அவற்றையுஞ், 'சீர் கூனாத னேரடிக் குரித்தே' என்றதனானே கொள்வலெனின், அசைச்சீரினை வாளாது சீரென்னானென்பது, 'சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது (தொல்.செப்.41) என்றவழிக் கூறியவதனான் அறிக. அசைச்சீரினை வாளாது சீரென்னாமைக்கு மேலைச்சூத்திரமும் இச்சூத்திரமுந் தாமே கரியாயின வென்பது. என்றார்க்கு, இவற்றையும் முதற்கண்ணே காட்டியதென்னை? சூத்திரத்துள் அவ்வாறு வைத்துரைத்ததில்லையாலெனின், ஏற்புழிக் கோடலென்பதனான் முதற் கணின்று’ என்பது கொள்ளப்படும். இக்கருத்தானே வஞ்சிப் பாவிற்கும் அவ்வாறே கொள்க.2 (ச கூ) நச்சினார்க்கினியம் : இது, மூன்று பாவிற்கும் உரிய அளவடிக்கு எய்தாத தெய்துவிக்கின்றது இ-ள். அளவடிக்குச் சீர் கூனாதல் உரித்து. எ-று. இஃது. இருவகையடிக்கும் உரித்து.8 உ-ம்: "அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே' (குறுந்தொகை-உகசு) 1 , அசையினை அடைமொழியின்றிச் சீர்' என வழங்குதல் இல்லையென் பதற்கு, அசைகூனாகும் என மேலைச்சூத்திரத்தும் சீர்கூனாதல் என இச் குத்திரத்தும் ஆசிரியர் குறித்துள்ள பெயர்களே சான்றாயின என்பதாம். 2. அசையும் சீரும் கூனாகும் என்றதன்றி அவை கூனாய்வரும் இடம் அடிமுதற்கண்' என்பது ஆசிரியரால் தெரித்துமொழியப்படாதுபோயினும் கூன் வரும் இடம் அடிமுதற்கண் என்பது உரையிற்கோடல் என்னும் உத்தியாற் கொள்ளப்படும். 3. இருவகையடியென்றது, கட்டளையடி, சீர்வகையடி என்னும் இரு வகையடிகளையும்.