பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ويتي ويلي -سيتي 'உதுக்காண் சுரந்தானா வண்கைச் சுவனமாப் பூதன்' “உலகினுட் பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும், என்று மூன்று பாவினும் வந்தன. ஏற்புழிக்கோடல் என்பதனால் அடிமுதற்கட் கோடும், தன்னினமுடித்தல் என்பதனான் வஞ்சிக்குங்கொள்க: 'உலகே முற்கொடுத்தார் பிற்கொளவும்’ எனவரும். ஆய்வுரை : இதுவும் கூன் வரும் இடம் உணர்த்துகின்றது. (இ.ஸ்) சீர் முழுவதும் கூனாகி வருதல் நேரடியாகிய நாற்சீரடிக்கு உரியதாகும் எ-று. இவற்றுக்கு உதாரணம் முன்னுரைகளிற் காண்க. ஐவகை அடியும் விரிக்குங் காலை وكسي f4ي மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும்3 எழுபது வகையின்க் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே. இளம்பூரணம் : என்--எனின். மேற்சொல்லப்பட்ட அடிக்கெல்லாம் விரியுணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்) ஐவகை அடியும் விரிக்குங்காலை என்பது-நாற் சீரடியை எழுத்தளவுபற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய ஐந்தடியினையும் விரித்துணர்த்துங் காலத்து என்றவாறு. 1. நேரடிக்கண் சீர் கூனாய் வரும் என்று ஆசிரியர் பொதுவிதியாகக் கூறினாராயினும் ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால் சீர்கூனாய் வருதல் அடியின் முதற்கண் என்று கொள்வோம். 2. அளவடியால் இயலும் மூவகைப்பாவிற்கும் உரிய இவ்விதி குறளடி சிந்தடியால் இயன்ற வஞ்சிப்பாவுக்கும் தன்னினமுடித்தல் என்னும் உத்தியாற் கொள்ளப்படும் என்பதாம். 3. நிலத்த, வகைமையின், என்பன பேராசிரியர் உரையிற் கண்ட பாடங்கள்.