பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச. அ. இ.கி கண் மெய் என்பது-உடம்பு- அஃதாவது அசையுஞ் சீரும் தோற்றுதற் கிடமாகிய எழுத்து 1 மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும் என்பது-எழுத்து அமைந்த நாலெழுத்து முதலாக இருபதெழுத் தீறாகச் சொல்லப்பட்ட பதினேழு நிலத்தும் என்றவாறு.2 எழுபது வகையின் வழுவில வாகி என்பது - எழுபது வகைப் பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி என்றவாறு. எழுபது வகையாவது- இரண்டுசீர் தம்முட் புணரும் புணர்ச்சி எழுபது வகையாம் என்றவாறு. மேற் சொல்லப்பட்ட எண்பத்துநான்கு சீரினும்,3 (தொல் பொருள். செய்யுளியல், க. O உரை) இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும், ஆசிரியவுரிச் சீரான் வருவதனை ஆசிரியவுரிச்சீரடி எனவும், இயற்சீர் விகற் பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான் வருவதனை வெண்சீரடி எனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையிற்று வஞ்சியடி எனவும், உரியசையிற்றான் வருவதனை உரியசையீற்று வஞ்சியடி எனவும், ஒரசைச்சீரான் வருவதனை அசைச்சீரடி எனவும் வழங்கப்படும். அவற்றுள், இயற்சீரடி நேரீற் றியற்சீரடி எனவும் நிரையிற் றியற் சீரடி எனவும் இருவகைப்படும். நேரிற் றியற்சீரடியாவது நேரீறு நேர்முதலாகிய இயற்சீர் வருதலும் நேர்புமுதலாசிரிய வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வெண்பா வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வஞ்சியுரிச்சீர் வருதலும் நேர்முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்து வகைப்படும். நிரையிற் றியற்சீரும் இவ்வாறே நிரைமுதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். 1 , மெய்-உடம்பு; இச்சொல் அசையுஞ் சீருந்தோற்றுதற்கிடமாகிய எழுத்து' என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. 2. பதினேழ் நிலம் என்பன நாற்சீரடியில் ஒற்றுங் குற்றியலுகரமும் குற்றிய விகரமும் ஆய்தமும் நீக்கி நாலெழுத்து முதல் இருபதெழுத்தீறாக எண்ணப்படும் எழுத்தளவினால் அமைந்த பதினேழு நிலங்கள். 3. மேற்கூறப்பட்ட எண்பத்துநான்கு சீரினும் இயற்சீரால் வருவது இயற்சீரடி. (1) ஆசிரியவுரிச்சீரால் வருவது ஆசிரியவுரிச்சீரடி, (2) இயற்சீர் விகற்பித்து வருவது இயற்சீர்வெள்ளடி: (3) வெண்சீரால் வருவது வெண்சீரடி: