பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சி அ உஉக முதலாகிய சீர்களொடு உறழ்தல் ஐந்துவகைப்படும். நிரைபு நிரையுமுதலாகிய சீர்களொடு உறழ்தலும் ஐந்து வகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோ டொன்றுவனவும் ஒன்றாதனவும் என இருவகைப்படும். அவற்றுள், ஒன்றிவருவது நிரைபு நிரையு முதலாகிய சீரொடு உறழ ஐந்து வகைப்படும். ஒன்றாதது நேர்பு நேரு முதலிய சீரோடு உறழ ஐவகைப்படும். உரியசையீற்று வஞ்சியடியும் அவ்வாறே உறழப் பத்து வகைப்படும். அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழப் பத்து வகைப்படும். இவ்வகையால் தளை ஏழு பாகுபட்டன; இவை நேரொன் றாசிரியத்தளை, நிரையொன் றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என ஏழுவகையாம். அவ்வழி ஒரசைச்சீர் இயற்சீர்ப்பாற்படும். ஆசிரியவுரிச்சீரு மதுவேயாம் மூவசைச்சீருள் வெண்பாவுரிச்சீ ரொழிந்தன. வெல்லாம் வஞ்சியுரிச்சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையொடு நேராய் ஒன்றுவது நேரொன் றாசிரியத் தளை யாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன் றாசிரியத்தளையாம்; மாறுபட்டு வருவது இயற்சீர்வெண்டளையாம் ; வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம்; நிரையா யொன்றிற் கலித்தளையாம்; வஞ்சியுரிச்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றியவஞ்சித்தளையாம்; ஒன்றாதது ஒன்றாவஞ்சித்தளையாம். இவ்வகையால் தளை ஏழாயின. இவ்வாறாகி வருதல் வருகின்ற சூத்திரங்களா னுணர்க. இனி அடி அறுநூற்றிருபத்தைந்தாமாறு: அசைச்சீர் இயற்சீர் ஆசிரியவுரிச்சீர் வெண்சீர் வஞ்சியுரிச்சீர் என்னும் ஐந்தினையும் நிறுத்தி, இவ்வைந்துசீரும் வருஞ்சீராக வுறழும்வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ்விருபத்தைந்தின் கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாகும். அந் நூற்றிருபத்தைந்தின் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறுநூற்றிருபத்தைந்தாம் என்றவாறு. (ச அ) 1. ஒன்றாதது என்றிருத்தல் வேண்டும்,