பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க ତT கொளிஇ முடித்துக்கொள்ளச் செய்தல். வண்ணமென்பது, ஒருபாவின்கண்ணே நிகழும் ஒசைவிகற்பம். எனாவென்பன, எண்ணிடைச் சொல். யாப்பியல்வகையின் ஆறுதலையிட்ட அந்நாலைந்துமென்பது, யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறு மென்றவாறு. இவை யாப்பிற்கு இன்றியமையாத இலக்கணப் பகுதியவென விதந் தோதவே, இனிக் கூறும் உறுப்பெட்டும் இன்றியமையாமை இல்லை யென்றவாறு. 'அம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியையே புவனே யிழைபெனாஅப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ" யென்பது, இக்கூறப்பட்ட எண்வகை வனப்பொடு முன்னர்க் கூறிய இருபத்தாறுத் தொகுப்ப முப்பத்து நான்குறுப்பா மென்றவாறு. மற்றிவற்றை வனப்பென்று கூறற்குக் காரணம் அவற்றைக் கூறும் வழிச் (547) சொல்லுதும். நல்லிசைப் புலவர் செய்யுளென்பது, இவ்வுறுப்பனைத்துங் குறையாமற் செய்யப்படுவன நல்லிசைப் புலவர் செய்யுஞ் செய்யு ளெனப்படு மென்றவாறு. நல்லிசைப்புலவர் செய்யுள் எனவே, எழுநிலத்தெழுந்த (391, 476) செய்யுளுள்ளும் அடிவரையறை யுடையவற்றுக்கே இவ்விலக்கண மென்பது உம், திணையே கைகோளெனக் கூறும் உறுப்பு முதலாயினவெல்லாம் ஏனை அறுவகைச் செய்யுட்கும் (476-7) உறுப்பாகா வென்பது உம், அவையொழிந்த உறுப்பினுள் ஏற்பன பெறுமாயினும் ஆண்டு வரையறையின்மையிற் கூறானென்பது உம், அவை செய்தாரெல் லாம் அவற்றானே நல்லிசைப் புலவரெனப்படா ரென்பது உம் பெற்றாம்.! 1. எழுநிலத்தெழுந்த செய்யுளாவன: பாட்டு, உரை நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. இவற்றுள் முதற்கண்வைத்துரைக்கப்பட்ட பாட்டு என்பன அடிவரையறையுடையன. திணை கைகோள் முதலியஉறுப்புக்கள் இத்தகைய பாட்டுக்கேயுரியன. பாட்டொழிந்த அடிவரையறையில்லாத ஏனைய அறுவகைச் செய்யுட்கும் இவை உறுப்பாகா .