பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ 3-2-sh முன்பக்கத்தொடர்ச்சி என்பதற்கு எழுபதுவகைப்பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி, எனப்பொருள் கூறுதலே பொருத்தமுடையதாகும். வெள்ளைநிலம் பத்தென்பார் இவ்வாறு கொள்ளாது, σταφυσιευε»σιλε" வழு’ வெனக் கூட்டி - எழுபது வகை யின் வழுவிலவாகி என்பதற்கு எழுபது தளைவழுவின் நீங்கி" எனப் பொருள் கொண்டனர். எழுபது தளைவழுவாவன: ஆசிரிய நிலம் பதினேழுள்ளும் வெண்டளைதட்பப் பதினேழும், கலித்தளைதட்பப் பதினேழுமாய் ஆசிரியப்பா விற்கு முப்பத்துநான்கு தளைவழுவாம். வெள்ளை நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத் தளை தட்பப் பத்தும் கவித்தளை தட்பப் பத்துமாய் வெண்பாவிற்கு இருபது தளை வழுவாம். கலிநிலம் எட்டினுள்ளும் வெண்டளை தட்ட எட்டும் ஆசிரியத் தளை தட்ப எட்டுமாய்க் கலிப்பாவிற்குப் பதினாறு தளைவழுவாம். இவை எழுபது தளை வழுவாவன' என்பர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர். ஆசிரிய அடித்தொகை 261 ஆசிரியப்பாவிற்கு இயற்சீர் பத்தும் ஆசிரியவுரிச்சீர் ஆறும் எனப் பதினாறு சீர்கள் உரியன. அவற்றுள் தன்சீர் ஆறும் தளை வகுக்கப்படாமையின் கொள்ளப் படா. ஒழிந்த இயற்சீர்பத்தும் கொண்டு தளை வழங்கப்படும். இரண்டெழுத்துச் சீர், மூன்றெழுத்துச்சீர், நான்கெழுத்துச்சீர், ஐந்தெழுத்துச்சீர் என இயற்சீர் நான்கு வகைப்படும். ஈரெழுத்துச் சீர்கள் - 4. போதுபூ, போரேறு, பாதிரி, தேமா - சீர்கள். இவற்றுள் தேமாவும் பாதிரியும் ஐந்தெழுத்தடிமுதல் பதினேழெழுத்தடிவரை பதின்மூன்றடி பெற்று வருதலின் 13 x2 =26 அடிகளாயின. போதுபூ. போரேறு என்னும் இரண்டும் ஆறெழுத்தடி முதல் பதினேழெழுத்தடிவரை பன்னிரண்டடிகள் பெற்று வருதலின் 12X2=24 அடிகளாயின. ஆக ஈரெழுத்துச்சீர் பயிலும் ஆசிரிய அடிகளின் தொகை 50. மூவெழுத்துச்சீர்கள் 7 பாதிரி, புளிமா, விறகுதி,போதுபூ, போரேறு பூமருது, கடியாறு. இவற்றுள் போதுபூ, விறகுதி, கடியாறு...என்னும் மூன்றுசீரும் ஏழெழுத்தடி முதல் பதினெட்டெழுத்தடிவரை பன்னிரண்டடிகள் பெற்று வருதலின் 12×3=36 அடிகளாயின். பாதிரி’ புளிமா, போரேறு, பூமருது' - என்னும் நான்கு சீரும் ஆறெழுத்தடி முதல் பதினெட்டெழுத்தடிவரை பதின்மூன்றடிகள் பெற்று வருதலின் 量3×4=52 அடிகளாயின. ஆக மூவெழுத்துச்சீர்டயிலும் ஆசிரிய அடிகளின் தொகை 88 நாலெழுத்துச்சீர்கள். 5. கணவிரி, பூமருது, கடியாறு, விற்குதி, மழகளிறு. அவற்றுள் 'பூமருது, ஏழெழுத்தடிமுதல் பத்தொன்பதெழுத்தடி வரை பதின் மூன்றடிகள் பெற்று வருதலின் 13 அடிகளாயின.