பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌_°_子弹 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் முன்பக்கத்தொடர்ச்சி கணவிரி, கடியாறு மழகளிறு, விறகுதி என்னும் நான்குசீரும் எட்டெழுத்தடிமுதல் பத்தொன்பதெழுத்தடிவரை பன்னிரண்டடிகள் பெற்று வருதலின் 量2×4=48 அடிகளாயின. ஆக நாலெழுத்துச்சீர்பயிலும் ஆசிரியவடிகளின் தொகை 61 . ஐந்தெழுத்துச்சீர் 1. 'மழிகளிறு' என்னும் ஐந்தெழுத்துச்சீர் ஒன்பதெழுத்தடி முதலாக இருபதெழுத்தடிவரை பன்னிரண்டடிகள்பெற்று வருதலின் 12. இவ்வாறு இயற்சீர்களால் இயன்ற எல்லா அடித்தொகைகளையும் கூட்ட ஆசிரிய அடிகளின் தொகை 211 ஆகும். அசைச்சீர்கள் அசைச்சீர்கள் ஆசிரியப்பாவினுள் ஒரெழுத்துச்சீரும் ஈரெழுத்துச்சீரும் மூவெழுத்துச் சீருமாகப் பகுத்துரைக்கப்படா. நேர், நேர்பு என்னும் அசைகள் ஒரெழுத்தாகியவழி நான்கெழுத்தடிமுதலாகப் பதினைந்தெழுத்தடிவரையும் வருங்கால் அசையொன்றிற்குப் பன்னிரண்டடிகளாக இரண்டசைகட்கும் இருபத்து நான்காம். அவ்விரண்டசையும் தேமா” என்னும் ஒருசீரேயாமாதலின் அலகுநிலையாற் பன்னிரண்டடிகளே கொள்ளப்படும். இனி நேர்பு அசை இரண்டெழுத்தாகக் கொள்ளுமிடத்து ஐந்தெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயரப் பன்னிரண்டடியாம். நிரை, நிரைபு என்பன இரண்டெழுத்தாயவழி ஐந்தெழுத்தடிமுதல் பதினேழெழுத்தடி வரை ஒவ்வொன்று பதின்மூன்றடிகளாக இரண்டசைகட்கும் இருபத்தாறாகும். நிரை, திரைபு என்னும் அவ்விரண்டசையும் புளிமா என்னும் சீரேயாமாதலின் அலகு நிலையாற் பதின்மூன்றடிகளேயாகக்கொள்ளப்படும். திரைபு அசை மூன்றெழுத்தாயவழி ஆறெழுத்தடிமுதல் பதினெட்டெழுத்தடிவரை பதின்மூன்றடிகளாம், நேரசையும் நேர்பசையும் ஒரெழுத்தும் ஈரெழுத்துமா ஆங்கால் இருபத்து நான்கடி ஆக்கின. நிரையசையும் நிரைபசையும் ஈரெழுத்து மூவெழுத்துமா ஆங்கால் இருபத்தாறடி ஆக்கின. இவையெல்லாம் தலைப்பெய்ய, ஆசிரியத்துள் ஐம்பதடி அசைச்சீராயின. இவை ஐம்பதும் மேற்சொன்ன இருநூற்றொருபத் தொாடியும் தலைப்பெய்து எண்ண ஆசிரிய அடித்தொகை இருநூற்றறுபத் தொன்றாம். வஞ்சியடி வஞ்சிப்பா நாலெழுத்து முதல் ஆறெழுத்துவரையமைந்த அடிகள் மூன்றும் ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்துவரையமைந்த அடிகள் மூன்றும், அளவடியுள் பத்தெழுத்து முதல் பன்னிரண்டெழுத்துவரையுள்ள முதல் மூன்றும் ஆகிய ஒன்பது நிலமும் , முச்சீர்கட்டளையடியாற் பெற்ற முச்சீரடியுமாய வஞ்சி பத்துநிலமும் பெற, அவையும் ஆசிரிய அடியுள்ளேயடங்கும். -