பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் شبیه سس سایر இனி, ஆசிரியத்துட் கலித்தளை தட்குங்கால் அவர் தாந் தளைவேண்டுமாற்றான் வெண்சீர்நிற்ப இறுதி நிரை வரவேண்டுமாகலானுங், கட்டளையடிக்கண் வெண்சீர் வருமென்றிலனாகலானும். வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே! (தொல். செய் 29) என்பதனான் இயற்சிரை வெண்சீராக்கிக்கொள்ளினும் அச் சூத்திரத்துக்கு அவ்வாறு பொருளுரைப்பிற் படுங் குற்றம் ஆண்டுக் கூறினாமாகலானும் அது நிரம்பாதென்பது, அற்றன் றியும், ஒரெழுத்து முதலிய நிலங்கள் ஒரோநிலத்து இரண்டும் மூன்றுந் தளை வழுக் காட்டலாமாகலின் எழுபது வகையின் வழு வெனலுமாகாது என்பது. இனி, அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய’ (தொல், செய் 58) என்னும் எடுத்தோத்துக் கிடப்ப இலேசினான் இரண்டுநில னேற்றி வெள்ளைநிலம் பத்தெனலுமாகாது. என்னை ? 'அளவடி மிகுதி யுளப்படத்தோன்றி யிருநெடி லடியுங் கலியிற் குரிய (தொல். செய் 29.) என ஒதினான்; இதனினுஞ் சிறந்த வெண்பாவிற்கும் அங்ங்னம் ஒதுவான்மன் ஆசிரியன் அதுவே கருத்தாயினென்பது. அல்ல துாஉங் கலிப்பாவினுள் வெண்சீரொன்றினுங் கலியோசை பிறக்கு முன்பக்கத்தொடர் க்வி இருபத்தொன்றிலும் வெண்டளையும் கலித்தளையுமாகி வேற்றுத்தளை தட்ப 42தளை வழுவுதலும் வெள்ளைநிலம் பதின் மூன்றனுள்ளும் ஆசிரியத்தளை பதின்மூன்றும் கலித்தளை பதின்மூன்றும்தட்ப இருபத்தாறு தளை வழுவும், கவிநிலம் பதினொன்றினுள்ளும் ஆசிரியத்தளை பதின்மூன்றும் வெண்டளை பதின்மூன்றும் தட்ப இருபத்தாறு தளைவழுவும் எனத் தளைவழு தொண்ணுாற்று நான் காதலும் கொள்ள வேண்டிய நிலையேற்படும். “ஞாயிறு கசகுவண்டு வண்டு வண்டு என்றஅடி நிரையீற்றியற்சீரின் முன் நிரைமுதல் வெண்சீர் வந்து தளைத்தமையால், அவர்கருத்துப்படி கவித்தளையாகிய அவ்வடி ஆசிரியவடியன்று எனல் வேண்டும். ஆகவே அன்னோர் கூறுமாறு களைவழு, எழுபது என வரையறுத்தல் எவ்வாற்றானும் பொருந்தாது என மறுத்தார் பேராசிரியர்.