பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்கம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கலிப்பாவிற்கு நேரீற்றியற்சீர் மூன்றொழித்து ஒழிந்த இயற் சீர் பதினாறும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் என இருபத்துநான்காம். இவை மூன்று பகுதியுந் தொகுப்ப எழுபத்தெட்டாயின. அவற்றுள், ஆசிரியத்துள் வந்த அசைச் சீர் நான்கினையும் வெண்பாவினுள் வந்த அசைச்சீர் நான்கினை யும் ஈண்டுத் தளைகொள்ளுங்கால், இயற்சீர்ப்பாற்படுத்து அடக் குகவென்று ஆண்டுக் (28) கூறினமையின் ஈண்டு அவற்றை இயற்சீர்ப்பாற் படுத்தடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும். அங்ங்னங் கொள்ளப்பட்ட சீர் ஒன்றொன்றனோடு தட்குங்கால் அவ்வெழுபது வகையானுமன்றித் தட்குமாறில்லை. அதுநோக்கி "எழுபதுவகையின் வழுவிலவாகி, யென்றானென்பது. அவை தட்குமாறு முன்னர்ச் (340) சொல்லுதும்.2 அங்ங்னந் தளைசிதையா அடி அறுநூற்றிருபத்தைந்தும் மூன்று பாவிற்கும் உரிய பகுதியவாம். யாங்ங்னம்? ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்கும், வெண்பாவடி நூற்றெண்பத்தொன்றும், கலியடி நூற்றிருபதுமென அறுநூற்றிருபத்தைந்தாம். மெய்வகை யமைந்த என்றதனான் நான்குசீருள்ளும் உறழ்கின்ற சீரினை அடிமுதற்கண்ணே வெளிப்படவைத்து அச்சீரின் அடியாக்கி உறழப்படுமென்பது கொள்க. அல்லாக்கால் இடையும் இறுதி யும் வைத்துறழ்தன் முதற்கணின்றதோர் சீர் இரண்டான் அடியாகியும் அவ்வடி மயங்குமாகலான் அது மயங்கக் கூறலென் னுங் குற்றமாமென மறுக்க.4 1. இவ்வுரைப்பகுதி, எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட கட்டளையடிகளில் ஆசிரியம் தொல்காப்பியனார் கருத்தின்படி தளைகொள்ளும் முறைமை எழுபது வகையாதலை விளங்க விரித்துரைக்கும் நிலையில் அமைந்துள்ளமை கானலாம். 2. முன்னர்ச் சொல்லுதும் - பின்னர்க் கூறுவோம். 3. அடியுறழ்தற்குரிய இயற்சீர், ஆசிரியவுரிச்சீர், வெண்பாவுரிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்னும் சீர்கள் நான்கினுள்ளும் உறழ்தற்குரிய சீர்களை நாற்சீரடியின் முதற்கண்ணே வெளிப்படவைத்து, அச்சீரினால் அடியாக்கி உறழப்பெறும் என்பார் மெய்வகையமைந்த பதினேழ்நிலம் என அடைகொடுத்தோதினார். உறழ்தல் - பெருக்குத்ல். 4. சீர்களை அடிமுதற்கண் வைத்துப்பெருக்கிக் காணும் இம்முறையினை டுத்து இடையும் இறுதியும் உள்ள சீர்களை உறழ்ந்து காணுதல், அடிமுதற்கண் நின்ற சீர் இரண்டால் அடியாகி அங்ங்னம் முதற்கண்வைத்துறழும் அடிகளும் வி இடைக்கண்ணும் இறுதிக்கண்லும் வைத்துறழம் அடிகளும் தம்முள்வேறுபட்டு மயங்குமாதலின் அங்ங்னம் உறழ்தல் மயங்கக்கூறல் என்னுங் குற்றமாமாதலின் அங்ங்னம் உறழ்ந்து காணுதல் பொருந்தாது என்பதாம்.