பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ SD-f3 - 3. “எள்ளற்ற முந்நூற் றிருபத்து நான்ககவல் வெள்ளைக்கு நூற்றெண்பத் தொன்றாகுந்-துள்ளல் நவையறு நூற்றிருபத் தைந்தா மடி நாடின் அவையறு நூற்றிருபத் தைந்து.' ஆசிரியத்துள் வருமெனப்பட்ட சீர் இருபத்தேழும் ஒரோ வொன்று பன்னிரண்டாயுறழ அகவலடி முந்நூற்றிருபத்து நான்காம் 1 இது பயனில் வெளி. 'நால்வே றுரியசைச்சீர் நால்வே றகவற்சீர் பால்வேறு பட்டியற்சீர் பத்தொன்ப தாக இருபஃதேழ் சீரகவற் கீரிரண் டாதி இருப தெழுத்தளவு மேற்று." 'ஆசிரியப் பாவினான் கைந்தாறே ழெட்டொன்ப தாதி நிலமாறா மைஞ்சீரான் ஈறு நிரையாஞ்சீர் நேரசைச் சீர்க்கொன்றொன் றேற்ற வரை யாதொன் றேறிற்றே வந்து.” ஒரெழுத்துச்சீரும் ஒரெழுத்தசைச்சீருஞ் சுருக்கத்திற் கெல்லை யாகிய சீராகலான் அவை சுருக்கத்திற்கு எல்லையாகிய நாலெழுத்தடி முதற் பதினைந்தெழுத்தடியளவும் உயரும். அவை: “நுந்தை வண்டு வண்டு வண்டு’ எனவும், “நுந்தை காருருமு நனிமுழவு நனிமுழவு’ எனவும், ஒரெழுத்துத் தேமாவடி பன்னிரண்டற்கும் முதலடியும் முடிந்தவடியுங் கண்டுகொள்க. ‘வண்டு வண்டு வண்டு வண்டு’ 1. ஆசிரியத்துள் 27 சீர்களும், வெண்பாவினுள் 27 சீர்களும், கவிப்பாவில் 24 சீர்களும் ஆக இவை மூன்று பகுதியையும் கூட்ட 78 சீர்களாகும். அவற்றுள் ஆசிரியத்துள் வந்த அசைச்சீர் நான்கியுைம் வெண்பாவினுள் வந்த அசைச்சீர்நான்கினையும் இயற்சீர்ப் பாற்படுத்து அடக்கின் பாக்களிற் பயிலும் சீர்கள் எழுபதாதல் புலனாம். இங்ங்னம் கொள்ளப்பட்ட சீர்கள் தளைக்குமிடத்து இவ்வெழுபது வகையானன்றித் தளைக்குமாறில்லை யென்பார் எழுபது வகையின் வழுவிலவாகி’ என்றார் ஆசிரியர், ஆசிரியத்துள் வருமெனப்பட்ட இருபத்தேழுசீர்களுள் ஒவ்வொன்றும் நாலெழுத்தடி முதல் பதினைந்தெழுத்தடியளவும் பன்னிரண்டடிகளாய் உறழ ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்காகும்.