பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ - 3. B. 332 இயற்சீர்வெண்டளையும், இயற்சீரொடு தட்ட வெண்சீர். வெண்டளையும், துள்ளற்குக் கலித்தளையும் ஆக அறுநூற். றிருபத்தைந்து தளையும் மூன்று பாவிற்கும் பகுக்குங்கால் அகவற்கு முந்நூற்றிருபத்து நான்கும், வெள்ளைக்கு நூற். றெண்பத்தொன்றும், கலிக்கு நூற்றிருபதுமாம். ‘மெய்வகை யமைந்த' என்றதனான் நான்கு சீரினும் உறழ்கின்ற சீரினை அடிமுதற்கண்ணே வெளிப்படவைத்து அவ்வச்சீரி னடியாக்கிப் பெயருங் கொடுத்து அகவற்கு ஒரோவொன்று பன்னீரடியாகவும் ஒழிந்த இரண்டற்கும் பிறவாறாக. வும் உறழப்படும். இனி அகவற்கு உறழுமாறு : 'இயற்சீ ருரிச்சீ ரசைச்சீர் கூடி யிரண்டு தலையிட்ட வையைந்து சீரா? யகவற் கொரோவொன் றுறழு மடித்தொகை யீரா றென்ப வியல் புணர்ந் தோரே' ‘அகவற் குரியசீ ரிருபத் தேழனுள் நுந்தையும் வண்டும் முதல்வரு மடிக்க ணந்நான் கெழுத்து முதலாய்க் கொண்டு பதினைந் தளவு மேறிப் பெறுந்தொகை யீரா ஹீரா றாகுமென்ப" 1. அகவற்பாவில் வரும் நாற்சீரடியில் அமைதற்குரிய நான்கு சீர்களுள் முதல் நிற்கும் சீரால் அவ்வடிக்குப் பெயர் தந்து, அம்முதற்சீருடன் இரண்டாஞ்சீர் மூன்றாஞ்சீர் நான்காஞ்சீர்களைப் புணர்த்து அடியமைக். கும் நிலையில் ஒற்றும் குற்றுகரமும் ஆய்தமும் நீங்கலாக அவ்வடியில் மொத்த எழுத்துக்கள் நான்கு முதல் பதினைந்து வரையமைய முதற்சீர் ஒவ்வொன்றும் பன்னிரண்டடிகளாகப் பெருக்கப்பெறும். 3 இரண்டுதலையிட்ட ஐயைந்துசீர்-இரண்டினைக்கூட்டிய இருபத்தைந்துசீர்; எனவே இருபத்தெழு சீர்கள் என்பதாம். அவையாவன : (1) நுந்தை, (2) வண்டு (ஒரெழுத்துத்தேமா), (3) தேமா, (4) மின்னு, (5) வரகு, (ஈரெழுத்துத் தேமா), (6) ஞாயிறு, (7) போதுபூ (8) போரேறு, (9) புளிமா (10) அரவு (11) பாதிரி, (12) வலியது, (13) மேவுசீர், (14) நன்னானு (15 பூமருது (1 கடியாறு, (17) விறகுதி, (18) நீடுகொடி, (19) கணவிரி, (20) உரறுபுலி, 1211 காருருமு, (22 பெருநானு, 123 உருமுத்தி, {24} வழகளிறு, 1251 நானுத்தள்ை, 1261 விரவுகொடி, 1271 நரையுருமு என்பன். இவ்வாய்ப்ாடுகள் இவ்வுரையில் மேற்கோளாக ஆளப் பெறும் உரைச் சூத்திரங்களில் இடம்பெற்றுள்ளமை காணலாம்.