பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உ-ம். நுந்தை வண்டு வண்டு வண்டு எனவும், துந்தை காருருமு நளிமுழவு நளிமுழவு எனவும் ஒரெழுத்துத் தேமாவடி நான்குமுதற் பன்னிரண்டளவும் உயர்வனவற்றிற்கு முதலடியும் முடிவிலடியுங் காட்டினாம். இதற்கு மேல் வருவனவற்றிற்கும் இடைநின்றனவற்றையு மிவ்வாறே சீர்தளைப்பெய்து ஒட்டிக் கொள்க. வண்டு வண்டு வண்டு வண்டு எனவும் வண்டு காருருமு நளிமுழவு நளிமுழவு எனவும் வண்டு என்னும் ஒரெழுத்துச் சீரடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங்காட்டினாம். 'தேமா மின்னு வரகுமுதல் வருமடி யைந்துமுத லீரெட் டளவு முயர்ந்து வந்த தொகைமூ வொருபத் தாறே” தேமா வண்டு வண்டு வண்டு எனவும், தேமா காருருமு நளிமுழவு நளிமுழவு எனவும் தேமாஅடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவும் காட்டினாம்; மின்னு வரகு என்னும் இரண்டற்கும் இஃதொக்கும். “ஞாயிறு போதுபூப் போரேறு புளிமா அரவு முதலா வந்தவைந் தடியு மாறு தொட்டுப் பதினே ழளவு முயர்ந்த தொகையா றொருபஃ தாகும்’ ஞாயிறு வரகு வண்டு வண்டு எனவும் ஞாயிறு நளிமுழவு நளிமுழவு நளிமுழவு எனவும், ஞாயிற்றடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங்காட்டினாம். போதுபூ போரேறு என்னும் இரண்டற்கும் ஈதொக்கும். புளிமா வண்டு வண்டு வண்டு எனவும் புளிமாக் காருருமு நளிமுழவு எனவும் ஒட்டுக. அரவுக்கும் இவ்வாறே ஒட்டுக என்றைந்தடிக்கும் முதலும் முடிவுங் காண்க. "பாதிரி வலியது மேவுசீர் நன்னாணுப் பூமருது கடியாறு விறகுதி நீலிகொடி யாதி யாகிய வடிக டாமே யேழுமுதன் மூவா றளவு முயர்ந்த தொகையாறு முடிவிட்ட தொண்னு றாகும்’ பாதிரி வரகு வண்டு வண்டு எனவும் பாதிரி நளிமுழவு நளிமுழவு நளிமுழவு எனவும் பாதிரியடி பன்னிரண்டற்கும் முதலுங் முடிவுங்காட்டினாம். ஒழிந்த ஏழற்கும் இவ்வாறே யொட்டிக்காண்க.