பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க ද් மற்று, யாத்தசீரே படியாப் பென்றதென்னை? தளையென் பதோர் உறுப்புப் பிறர் வேண்டுபவாலெனின், இருவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப, தளைத்தலிற் றளையாதலானும் வேறு பொருளென வேண்டாரென்பது; என்றார்க்கு, அசையின்றிச் சீருமில்லை, சீரின்றி அடியுமில்லையாம்பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும்போல, அவை கொள்ளப்படுந் தளையென வேறொன்றின்மையிற் கொள்ளான்;1 என்னை ? அது குறளடியென வேறுறுப்பாயினமையின் என் பது, தளையென்றிதனைக் கோடுமேல் அதனைக் குறளடி யென லாகாதென்பது. அல்லதுாஉம், ஈரசை, கூடி ஒரு சீராயினவாறு போல இருசீர் கூடியவழி அவ்விரண்டனையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே நாற்சீரடியினை இடைதுணித் துச் சொல்லுவதன்றி நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லையென்க. யாத்தசீர்’ என்றதனானே அசை தொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பது உம், அச் சீரான் அடியானவழி "சீரியைந்திற்றது சீரெனவே படு (323) மென்றதனாற் சீரெல்லாந்துணித்துச் சொல்லப்படுமென்பது உங் கூறினான் இவ்வாசிரியனென்பது. 2 அற்றன்றியும், அவ்வாறு தளைகொள்வார் சீரா னடிவகுப்பது உங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற் 1. அசை, சீர், அடி எனப்படும் அவை உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும் போல முறையே சினையும் முதலுமாகக் கொள்ளப்படுவன. தளை என்பது சீரது தொழிலே யாதலானும் இருசீர் கூடியது குறளடியென வேறோருறுப்பாதலானும் தளையினை ஒர் உறுப்பாகக் கொண்டிலர் தொல்காப்பியனார். 2. இனி, அசையிரண்டு கூடிச் சீராமாறுபோலச் சிரிரண்டுகூடித் தளையா மென்றால் நாற்சீரடியினை முதலிருசீரும் ஒன்றாகவும் பின்னிருசீரும் ஒன்றாகவும் துணித்துக் கூறுதல் வேண்டும். அவ்வாறு நாற்சீரடியினை இருசீர் இருசீராக இரண்டாக இடையே துணித்துக்கூறாது ஒவ்வொரு சீரினையும் தனித்தனியே துணித்து நான்கு பகுதியாகத் தாள அறுதிபடக் கூறுதலே ஒசைமரபாக அமைத் துளது, அன்றியும் யாத்தசீர்' என அடைபுணர்த்தோதினமையால் சீரினை அசை தொறுத் துணித்துச் சொல்லின் சீராகாதென்பதும் அசைகளைப் பிரிவின்றிச் சேர்த்துச் சொல்லவே சீராமென்பதும், சீரால் அடியாகும் நிலையிற் சீரியைத்திற்றதுசீர் (323) எனக் கூறுதலால் அடியிலுள்ள சீர்கள் எல்லாம் தாள அறுதிப்படத் துணித்துச் சொல்லப்படுமென்பதும் தொல்காப்பியனார் கொள்கையாதல் நன்கு புலனாம். கண்டம்படச் சொல்லுதலாவது, அடிக்கனுள்ள சீர்களை அறுதிபடத் துணித்துச் சொல்லுதல்,