பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፰ .cff* $። தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் விரவு கொடி புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய் எனவும் விரவுகொடி புலிவருவாய் புலிவருவாய் புலிவருவாய் எனவும் விரவுகொடியடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். ஒழித்தனவற்றுற்கும் இஃதொக்கும். "கலிக்குசித் தாக வுறழ்ந்த வடித் தொகை யீரைம் பதனொடு நாலைத் தாகும்' 'மூவகைப் பாவிற்கு முறழ்ந்த தொகை யறு நூற் றிருபத் தைந்தா கும்மே” ஆக அடி கrஉரு இவற்றுள் அகவற்கு நாற்பத்தொன்றும் வெள்ளைக்குப் பதினெட்டும் ஆக ஐம்பத்தொன்பதடிக்குத் தளைவழுப்படுதலின்? அவை களைந்து தொடைகொள்ளுமாறு ‘மெய்பெறு மரபின்’ (செய்-கCக) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். 1. முற்கூறிய வண்ணம் கலிப்பாவிற்குரிய அடிகள் நூற்றிருபதாகும். ஈரைம்பது - நூறு. தாலைந்து - இருபது. சிரைம்பதனொடு நாலைந்துநூற்றிருபது. 2. கட்டளையடி ஆறுநூற்றிருபத்தைந்தும் தொடை கொள்ளுங்கால் ஐம்பத்தொன்பது வழுவுள. அவையாவன : நுந்தை, வண்டு, தேமா, மின்னு, ஞாயிறு, போதுபூ, போரேறு, பாதிரி, மேவுசீர் , நன்னாணு, பூமருது, நீடுகொடி, காருருமு, நானுத். தளை எனவரும் நேர்முதலிய இவை பதினான்கும் அடிமுதற்சீராய் அடிமோனைத் தொடையாய் வரும் ஈரடிக் கூட்டத்தில் அகவலுக்கு எழுத்துப் பெருகிய நிலத்தில் இவ்விரண்டடி தளை வழப்படும். வரகு, புளிமா, அரவு, வவியது, கடியாது, விறகுதி, கணவிரி, உசறுபுலி, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு விரவுகொடி, நரையுருமு. எனவரும் நிரை முதலிய இவை பதின்மூன்றும் எழுத்துச் சுருங்கிய நிலத்தில் ஒவ்வோரடி தளைவழுப்படும். ஆக அகவற்கு நாற்பத்தொரு தளைவழுவாயின. இனி வெண்பாவுக்கு முற்கூறிய சீர்களுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும் நீக்கி வெண்பாவுரிச்சீர் நான் கும் கூட்ட இருபத்தேழு சீர்களாகும். இவற்றுள் நேர் முதலிய பதினான்கு சீரும் அடி முதற்சீராய்த் தொடை யாய் வரும் 745 கூட்டத்தில் எழுத்துச் சுருங்கிய நிலத்தில் ஒவ்வொன்று தளை வழுப்படும். நிரை முதலாய சீர்களில் வரகு, கடியாறு, விறகுதி, வலியது - என்னும் நான்கும் எழுத்துப் பெருகிய நிலத்தில் ஒவ்வொன்று தளை வழுப்படும். ஆக வெண்பாவுக்குத் தளைவழுப் பதினெட்டாயிற்று. ஆகத்தளைவழு ஐம்பத்தொன்பதாயிற்று என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். (செய்யுளியல். க0க. ஆம் சூத்திரவுரை நோக்குக).