பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச.அ @.F*紅薯° ஆய்வுரை : இது, மேல் எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட கட்டளை யடிகளாய ஐந்தடிகளையும் உறழ்ந்து இத்துணையவாம் என அவற்றின் விரியாகிய தொகை கூறுகின்றது. (இ-ள்) நாற்சீரடியை எழுத்தளவுபற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய ஐவகையடிகளையும் விரித்துணர்த்துங் காலத்து (அவ்வடிகள்) அசையும் சீரும் தோற்றுதற்கு இடமாயமைந்த நாலெழுத்து முதல் இருபதெழுத்தீறாகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தின்கண்ணும் எழுபது வகைப் பட்ட உறழ்ச்சியின் (பெருக்குதலில்) வழுவுதலின்றி அறுநூற். றிருபத்தைந்தாகும் எ-று இங்கு எழுபதுவகை என்பது, இரண்டு சீர் தம்முட் புணர்ச்சியை என்பர் இளம்பூரணர். அவற்றின் விரிவை முன்னுள்ள இளம்பூரணருரையிலும் அதன் அடிக்குறிப்பிலும் <茄了@ö矿安。 அங்ஙனம் உறழுங்கால் ஓரசைச்சீர் இயற்சீர்ப்பாற்படும். ஆசிரிய வுரிச்சீரும் இயற்சீரே போலக் கொள்ளப்படும். மூவசைச் சீருள் வெண்பாவுரிச்சீர் ஒழிந்தனவெல்லாம் வஞ்சியுரிச்சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்றாசிரியத்தளை, நிரையாய் ஒன்றுவது நிரையொன்றாசிரியத்தளை; மாமுன் நிரையும் விளமுன் நேருமாக மாறுபட்டுத் தளைப்பது இயற்சீர் வெண்டளையாம். வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளை, நிரைவரிற் கலித்தளையாம். வஞ்சியுரிச்சீர்நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை; ஒன்றாதுது ஒன்றா வஞ்சித்தளையாகும். இவ்வகையில் தளை ஏழாயின. - அசைச்சீர், இயற்சீர், ஆசிரியவுரிச்சீர், வெண்சீர், வஞ்சியுரிச் சீர் என்னும் ஐந்தினையும் நிறுத்தி இவ்வைந்து சீரும் வருஞ்சீராக உறழும் வழி இருபத்தைந்து விகற்பமாகும். அவ்விருபத்தைந்தின் முன்னும் மூன்றாவது ஐந்து சீரையும் வருவித்து உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாகும். அந் நூற்றிருபத்தைந்தின் முன்னும் நான்காவது ஐந்துசீரையும் உறழ நாற்சீரடி அறுநூற். றிருபத்தைந்தாகும் என்பர் இளம்பூரணர்.