பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் {ويئ۴ث3ټۀ وي இனி, எழுபதுவகையின் வழுவிலவாகிவரும் அடிகள் அறுநூற்றிருபத்தைந்து என்னும் தொகைக்குப் பேராசிரியர் பின்வருமாறு வகைகூறி விளக்குவர் : ஆசிரியத்துள் இயற்சீர் 19, ஆசிரியவுரிச்சீர் 4,அசைச்சீர் 4, என இருபத்தேழாகி வரும். வெண்பாவில் ஆசிரியவுரிச்சீர் நான்கும். ஒழித்து ஒழிந்த சீர் இருபத்துமூன்றும் வெண்சீர் நான்கினொடுஞ் சேர அவையும் அவ்வாறே இருபத்தேழாக வரும். கலிப்பா விற்கு நேரிற்றியற்சிர் மூன்றொழித்து ஒழிந்த இயற்சீர் பதினாறும் ஆசிரிய்வுரிச்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் என இருபத்து நான்காம். இவை மூன்று பகுதியும் தொகுப்ப எழுபத்தெட்டா யின. அவற்றுள் ஆசிரியத்துள் வந்த அசைச்சீர் நான்கினையும் வெண்பாவினுள் வந்த அசைச்சீர் நான்கினையும் இயற்சீர்ப்பாற் படுத்து அடக்குக என்று ஆண்டுக் கூறினமையின், ஈண்டு அவற்றை இயற்சீர்ப்பாற்படுத்து அடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும். அங்ங்னம் கொள்ளப்பட்ட சீர் ஒன்று ஒன்றனோடு தளைக்குங்கால் அவ்வெழுபது வகையானன்றித் தளைக்கு மாறில்லை. அதுநோக்கி எழுபது வகையின் வழுவில வாகி’ என்றார். அங்ங்னம் தளை சிதையா அடி ஆசிரியஅடி 324, வெண்பாவடி 181, கலியடி 12 என அறுநூற்றிருபத்தைந்தாகும். இவற்றின் விரிவெல்லாம் பேராசிரியருரையிலும் அதன் அடிக் குறிப்பிலும் கண்டு தெளியத்தக்கனவாகும். - இனி, இச்சூத்திரத்திலுள்ள எழுபது வகையின் வழுவில. வாகி” என்ற தொடர்க்கு எழுபதுதளை வழுவின் நீங்கி’ எனப் பொருள் கொண்டு, "எழுபது தளை வழுவாவன : ஆசிரியநிலம் பதினேழுள்ளும் வெண்டளை தட்பப் பதினேழும், கலித்தளை தட்பப் பதினேழுமாய் ஆசிரியப்பாவிற்கு முப்பத்து நான்கு தளை வழுவாம். வெள்ளை நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத்தளை தட்பப் பத்தும், கலித்தளை தட்பப் பத்து மாப் வெனடாவிற்கு இருபது. தளை வழுவாம். கலிநிலம் எட்டினுள்ளும் வெண்டளைதட்ப எட்டும் ஆசிரியத்தளை தட்ப எட்டுமாய்க் கலிப்பாவிற்குப் பதினாறுதளை வழுவாம்! இவையெல்லாந்தொகுப்ப எழுபது தளை வழுவாம்" என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். அளவும் சிந்தும் வெள்ளைக் குரிய (செய்-58) எனவரும் சிறப்பு விதியால் வெண்பாவிற்கு எட்டு நிலமே கூறப்படுதலின் அதற்கு மாறாக வெள்ளைநிலம் பத்தெனக்கொண்டு கூறும் இவ்வுரை பொருந்தாது என்பர் பேராசிரியர்.