பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம். பேராசிரியம் : இஃது ஒழிந்த அடி இந்நாற்சீரடிபோல உறழ்கவென்றார்க்கு அவையுறழாவென உறழாமைக்குக் காரணம் கூறுகின்றது. (இஸ்) அந்நாற்சீரடிபோல் மற்றையடிகளையும் விரிப்பின், அஃது இலக்கணக் கட்டளையின் இகந்துபட்டதாம், அப்பகுதி யெல்லாம் அறிந்தோர் விரிக்குங்காலத்து (எ.று) அளவிறந்தன, எண்ணிறந்தன. அஃது இலக்கணங்கூறு மாறன்றென்றவாறு. அஃதெற்றாற்பெறுதுமெனின் முதனூல் செய்த ஆசிரியன் அகத்தியனார் சொல்லுமாற்றாற் பெறுது மென்றவாறு : எனவே என்சொல்லப்பட்டதாம் ? அங்ங்னம் வரையாது சிறப்புடையனவற்றுக்குஞ் சிறப்பில்லனவற்றுக்கும் ஒருங்கு இலக்கணங் கூறின் அவையெல்லாம் எடுத்தோதப்பெறாத இலக் கனத்தவாம்; அதனால் வரையறையுடையனவற்றுக்கன்றி. வாளாதே பரந்துபட்டவகையான் இலக்கணங்கூறல் பயனில் கூற்றாமெனவும் அது கருதி இதன் முதனுால்செய்த ஆசிரியருங் கூறிற்றிலரெனவுங் கூறியவாறு. வடநூலாசிரியர் ஆறுவகைப் பிரத்தியங்க ளான் எழுத்துக் களைக் குருவும் இலகுவுமென இருகூறு செய்து உறழ்ந்து பெருக் கிக் காட்டுவதோ ராறுமுண்டு. அவரும் இருபத்தாறெழுத்தள வும் உறழ்ந்து காட்டி, ஒழிந்தன ஞெகிழ்ந்துபோவர். அவ்வாறே சிர்களையுங் குருவும் இலகுவும்போல இருசீரடி இத்துணை யெனப் பெருக்கம் ஒழிந்தனவும் இவ்வாறே பெருக்கவுஞ் சிதைந்ததில்லை. அங்ங்னம் பெருக்குங்காலும் ஒரடிக்குரிய சீர் பத்தும் நூறும் ஆயிரமுமாக வைத்து உறழ்ந்த்க்காதும் வரும்: தொன்றில்லை.5 அங்ங்னம் உறழினும் இத்துணைச் சீரான் வந்த 1. அகத்தியனார் கூறிய சூத்திரம். 2. ஆறுவகைப்பிரத்தியங்களாவன: பிரத்தாரம், நஷ்டம், உத்திஷ்டம். ஒன்று இரண்டு மூன்று லகுகுருச் செய்கை, எண், அலகிட்டு நிலவளவை. 8. ஞெகிழ்ந்து போதலாவது, அடிகளை இருபத்தாறெழுத்தளவும் பெருக்கிக் காட்டி அதற்குமேலும் காட்டின் எண்ணிறத்தல் கருதி மேலும் எழுத்தெண்ணி அடிவகுக்கும் தம்முயற்சியினை நெகிழவிடுதல். 4. சிதைந்ததில்லை - கேடில்லை. 5 வருவதொன்றில்லை - வருவதொரு பயனுமில்லை. 6. உறழ்தல் - பெருக்குதல்.