பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ίύ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் றொழில்ல தின்மையினெனின், அற்றன்று, தொடுத்தற்றொழின் மாத்திரையானே தொடை யென்றானல்லன், அவ்வடிக்கண் நின்ற எழுத்துஞ் சொல்லும் பிறபொருளாகலான் அவற்றானே தொடை கொண்டமையின் வேறுப்பென்றானென்பது. அஃ தேற், சீருஞ் சீரும் இயைந்தவழி அவையிடமாக நின்ற அசை யால் தளைகொள்ளாமோவெனின், கோடுமன்றே, அதனை அடி யென்னாமாயின் என முற்கூறியவாறே கூறிமறுக்க. அல்லது உம் அவ்விரண்டசையுங் கூடிச் சீராமன்றோ வெனின் என்பது.1 மற்று நாற்சீரடியுள் இருசீ ரியைந்தவழிக் குறளடி யென்னா மாகலின் அதனைத் தளையென்னாமோவெனின் அங்ங்ணங்கொள் ளின் இருசீரடிக்கட்டளை வேண்டாதானாம்; ஆகவே, ஒருவழிக் கொண்டு ஒருவழிக்கொள்ளாமை மயங்கக்கூறல் (663) என் லுங் குற்றமாமென்பது? அல்லது உம், அங்ஙனமன்றி வருமாயின் அடிக்கெல்லாம் பொதுவகையால் தளையுறுப்பெனப் படாது எழுத்தும் அசையும்போல யாண்டும் வருவனவெல்லாம் உறுப்பெனப்படுவன வென்றற்கு. "இணைநூன் முடிபு தன்னுரன் மேற்றே” என்பதனாற் காக்கைபாடினியார் ஒதிய தளையிலக்கணம் ஈண்டுங் கோடல் வேண்டுமெனின், அதுவே கருத்தாயின் 1. அடியிரண்டு தொடுத்தல் தொழில்பற்றித் தொடைகொண்டாரல்லர்: அங்ங்னம் தொடுக்கப்படும் அடிக்கண் அமைந்த எழுத்துஞ் சொல்லும் பற்றித் தொடை கொண்டமையின் எழுத்துஞ்சொல்லுமாகிய அவற்றின் அமைப்பு தொடையென்னும் உறுப்பாயிற்று. சீருஞ்சீரும் இயைந்தவழி அவையிடமாகநின்ற அசையால் தளையென்பதனை உறுப்பாகக் கொள்லாகாதோ என்றால், சீரும் சீரும் இயைந்த அவ்வமைப்பினை அடியென்றதோர் உறுப்பாகக்கொள்ளுதலால் அதனையே தனையெனக்கொள்ளுதல் பொருந்தாது. அன்றியும் நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் கூடித் தளையென்றதோருறுப்பாமெனின் அவ்விரண்டும் கூடிய நிலையில் மற்றொரு சீராகவும் கொள்ளப்படுமல்லவா? என வினவி மறுத்தவாறு. 2. இருசிர் இணைதல் குறளடியென அடியென்பதோ உறுப்பாமெனக் கொள்ளினும் நாற்சீரடி யுள் இருசீர் இணைந்த நிலையினைக் குறளடியெனக்கூறும் வழக்கமில்லையாதலால் நாற்சீரடிக்கண் தளையென்றதோருறுப்பு கொள்ளலாமல்லவா என்றார்க்கு , அவ்வாறு நாற்சீரடிக்கண் தளையென்றதோருறுப்பினைக் கொள்ளுதலும் இருசீரடிக்கண்தளைகொள்ளாமையும் மயங்கக் கூறல் என்னும் குற்றமாம் ஆதலின் ஈரிடத்தும் தளையென்பதனை உறுப்பெனக் கொள்ளாமையே ஏற்புடையதாம் என்றவாறு.