பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஆய்வுரை : இது, நாற்சீரடிகளை விரித்தது போல ஏனையடிகளையும் விரித்துரைப்பின் வரம்பிலவாய் விரியும் என்கின்றது. (இ - ள்.) அடிகளின் பாகுபாட்டினை நன்குணர்ந்தோர் நாற்சீரடிகளைக் கட்டளைப்படுத்து விரித்தாற்போன்று ஐஞ்சீரடி முதலாக வரும் ஏனையடிகளையும் உறழ்ந்து காணுமிடத்து அவை வரம்பிலவாய் விரியும் எ-று. அஃதாவது முற்குறித்த நாற்சீரடிகள் அறுநூற்றிருபத்தைந் தோடும் ஐந்தாஞ்சீராக இயற்சீர், ஆசிரியவுரிச்சீர், வெண்பா வுரிச்சீர், வஞ்சியுரிச்சீர், ஒரசைச்சீர் எனமுற்கூறிய ஐந்து சீர் களையும் சேர்த்துப் பெருக்க ஐஞ்சீரடிகள் 3125 விகற்பமாகும். அவற்றுடன் ஆறாஞ்சீராக ஐஞ்சீரையும் பெருக்க 15625 விகற்ப மாகும். அவற்றுடன் ஏழாஞ்சீராக ஐஞ்சீரையும் பெருக்க 78125 விகற்பமாகும். இவ்வகையினால் எட்டாஞ்சீர் முதலாக மேலும், மேலும் பெருக்க வரம்பிலவாய் விரியும். அன்றியும் இங்குக் கூறப்பட்ட அடிகளை அசையாலும் எழுத்தாலும் விரிக்க வரம்பிலவாய் விரியும் என்பர் இளம்பூரணர். ரும். ஐவகை அடியும் ஆசிரியக் குரிய, இளம்பூரணம் : என்-எனின். ஆசிரியப்பா நாற்சீரான் வரும் என்பது உம் அதன்கண் விரிக்கப்பட்ட ஐவகையடியும் உரித்தென்பது உம் உணர்த்துதல் நுதலிற்று. (இ ள்.) நாற்சீரடிக்கண் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற் குரிய என்றவாறு.1 ஐவகையடியு முரியவென, அவற்றிற்கு முதலாகிய நாற். சீரடியும் உரித்தாயிற்று. 1. ஐவகையடிகளாவன: நாற்சீரடி தன்னையே நாலெழுத்து முதலாக இருப தெழுத்து முடியவுள்ள பதினேழு நிலத்தும் எழுத்தெண்ணி வகைப்படுத்தப்பெற்ற கட்டளையடிகளாகிய குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்பன. ஆசிரியக்கு-ஆசிரியத்துக்கு; குவ்வுருபு அத்துச் சாரியையின்றிப்புணர்ந்தது. நேரடியில் எழுத்தெண்ணிவகுக்கப்பெற்ற ஐவகையடியும் ஆசிரியத்துக்கு உரிய எனவே வெண்பா, கலிப்பாவாகிய ஏனைப்பாக்களுக்கு அவற்றுட்சில வருதல் இல்லை என்பதாம்.