பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ரும் உருள் எனவே இதுவும் அடங்காதோவெனின், அடங்காது; பாத் தோன்றும் அந்நிலங்கள் பகுத்துக்கொள்ளப் பொதுவகையால் ஆண்டோதினானென்பது. மற்றும் ஐவகையடியும் ஒராசிரியத் துக்கண் வரல்வேண்டுமோவெனின், அன்னதொரு வரையறை யுண்டே? வரையாது கூறினமையின் அவையெல்லாவற்றானும் வருக! வருங்கால் ஐந்தும் ஆசிரியத்துக்கு உரியவென்பதே கருத்து.2 ஒழிந்த பாவிற்கு நிலங் கூறாரோவெனின், ஆசிரியம் பதினேழ் நிலனுமுடைமையின் அக்கூறிய பதினேழ்நிலனுந் தளை விரவுதலின் தளை அதற்குப் பின் கூறித் தளையதிகாரம்பட்ட மையின் அவற்றின்பின் ஒழிந்த பாவிற்கு நிலனுங் கூறு மென்பது. மற்று ஆசிரியமே மகர வீறாதலின் 'மஃகான் புள்ளி முன் னத்தே சாரியை” (தொல். எழுத்-உரு. 14) என்பதனான் அத்துச்சாரியை பெறல் வேண்டுமெனின், அது செய்யுள் விகார மென்பாருமுளர். அற்றன்று, ஆண்டு நின்றது நான்காமுருபாயினன்றே அது கடாவாவது; அதனை ஏழாவ தன் பொருண்மைக்கண் அக்குச்சாரியை ஈறுதிரியாது வந்த தென்று கொள்ளப்படும்.4 (ருஉ) 1. ைெமந்த பதினேழ்நிலத்தும்’ என்றது, பாத்தோன்றும் நிலங்கள் பதினேழும் ஐவகையடிகளாகப்பகுத்துக்கொள்ளப் பொதுவகையாற் கூறியது. அதுகொண்டு ஐவகையடியும் ஆசிரியத்துக்கண்வரும் என்பது அங்குப் பெறப்படாது. 2. ஐவகையடியும் ஓர் ஆசிரியப்பாவிலேயே வருதல் வேண்டும் என்னும் வரையறையில்லை; ஐவகையடியும் அம்முறையே வருதல் வேண்டும் என வரையறுத்துரையாமையின். ஐவகையடியும் ஆசிரியப்பாவின்கண் வருதற்குரியன என்ற அளவிற் பொதுப்படக்கூறியதாகவே அதனைக் கொள்ளுதல் வேண்டும். 3. பதினேழ்நிலனும் உடையது ஆசிரியப்பாவேயாதலின் அதனை முற்கூறித் தளையதிகாரம்பட்டமையின் ஒழிந்தபாவிற்கும் நிலம் கூறுகின்றார். 4. ஆசிரியம் என்பது மகரiறாதலின் அது குவ்வுருபேற்குங்கால் அத்துச்சாரியை பெற்று ஆசிரியத்துக்கு எனவருதல் வேண்டும் எனக்கூறி, ஈண்டு 'ஆசிரியக்கு' என வந்தது செய்யுள் விகாரம் என்பாருமுளர் ஆசிரியக்கு என்பதனைக் குவ்வுருபேற்ற வேற்றுமைவிரியாகக் கொள்ளாது ஆசிரியக்குரிய" என்பது ஏழாம் வேற்றுமைப்பொருண்மைக்கண் அக்குச்சாரியை ஈறுதிரியாது வந்தது என்று கொள்ளப்படும் என்பதாம். இவ்விளக்கம் பேராசிரியரால் எழுதப்பெற்றதெனக் கொள்ளின் நாலெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ்நிலனும் ஆசிரியத்தின்கண் உரிய' என இச்சூத்திரத்தின் உரையினைத்திருத்திக்கொள்ளுதல் வேண்டும்.