பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝一安*@二 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் னும் ஆறெழுத்தினும் ஓரசைச்சீரும் ஈரசைச்சீரும் வருதலன்றி மூவசைச்சீர் வாராமை. பிறவாசிரியர் கொண்ட நேரொன்றாசிரி யத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை, கலித்தளை, ஒன்றியவஞ்சித்தளை, ஒன்றாவஞ்சித்தளை என எழுவகையினும், வஞ்சித்தளை நிலை மொழி வஞ்சியுரிச்சீராக வருஞ்சீர்க்கு முதலசையோடு ஒன்றியது ஒன்றியவஞ்சித்தளை எனவும் ஒன்றாதது ஒன்றாவஞ்சித்தளை எனவும் வழங்குபவாதலின் அவ்விருவாற்றானும் தளையாற் பயனின்றி நிலைமொழியாகிய வஞ்சியுரிச்சீர் தானே ஒசை யுணர்த்துதலின் வஞ்சித்தளை கோடல் வேண்டாராயினார்.1 இனி, வெண்சீர் வெண்டளையும் வெண்சீர் நிற்ப வருஞ்சீர் வெள்ளையும் வெண்சீராதல் இயற்சீராதல் வந்து வெண்டளை யாக வேண்டுதலின் நிலைமொழியாகிய வெண்சீரை வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே” (செய்யு-உஅ) என ஒதுதலின், அதனை நிரையீற்றியற்சீர் ஆக்கினால் வருஞ்சீர் நேர்முத லியற் சீராயின் அதுவும் இயற்சீர் வெண்டளையாம். அவ்வாறன்றி வருமொழியும் வெண்சீராயின் "தன்சீருள்வழித் தளைவகை வேண்டா' என்பதனான் அடங்கும். அதனான் இரு வாற்றானும் வெண்சீர் வெண்டளை கொள்ளாராயினார்.2 இனி 1. எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐந்தடியினும் ஏற்றவழி நிலைபெறும் அவ்வப்பாவிற்குரிய சீர்கள் என்பார் உரிய தன் சீர் என்றார். குறளடியாகிய ஐந்தெழுத்தினும் ஆறெழுத்தினும் ஓரசைச்சீரும் ஈரசைச்சீருமே வரும்; மூவசைச் சீர் வராது. நிலைமொழியாகிய வஞ்சியுரிச்சீர் வருஞ்சீரின் முதலசையோடு ஒன்றியது ஒன்றிய வஞ்சித்தளையெனவும் ஒன்றாதது ஒன்றாவஞ்சித்தளையெனவும் வழங்குபவாதலின், அவ்விருதிறத்தானும் தளையாற்பயனின்றி வஞ்சியுரிச்சீர்தானே வஞ்சிப்பாவின் ஒசையுணர்த்துதலின் வஞ்சித்தளை கோடல் இன்றி யமையாததன்று என்பதாம். 2. இனி, வெண்சீர் வெண்டளையென்பது, வெண்சீர் நிற்ப வருஞ்சீர் வெண்சீராவது இயற்சீராவது வந்து பொருந்துவது. வெண்சீரிற்றசை திரையசையியற்றே (செய்யுளியல்-உஅ) என்ற விதிப்படி நிலைமொழியாக நின்ற வெண்சீரை நிரையிற் றியற்சீர் போலக் கொண்டால் அதன்முன் வருஞ்சீர் நேர்முத லியற். சீராயின் இயற்சீர் வெண்டளையாகும். அவ்வாறன்றிச் வெண்சீர்முன் வருஞ்சீரும் வெண்சீராயின் தன்சீருள்வழித்தளைவகை வேண்டா என்றவிதிப்படி தளை கொள்ள வேண்டிய இன்றியமையாமை நேராது. எனவே வெண்சீர் முன் இயற்சீர் வரினும் தன்சீர் வரினும் இருநிலைமைக்கண்ணும் தளை வகுக்க வேண்டிய இன்றியமையாமையில்லை. எனவே எழுவகைத்தளைகளுள் ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாவஞ்சித்தளை, வெண்டளை என்னும் மூன்றும் தன்சீர்