பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருஉ இ.கி A. ஒழிந்த நான்கு தளையுங் கூறுகின்றாராயின் ஆசிரியத்தளையுங் கூறல் வேண்டா, அதுவும் இயற்சீரான் வருதவின் எனின், அதன்கண்ணே இயற்சீர் வெண்டளை கூறவேண்டுதலின் ஆசிரியத்தளையுங் கூறவேண்டு மென்க.1 (ருஉ) பேராசிரியம் : இஃது, எய்தாத தெய்துவித்தது; என்னை? இயற்சீராற் கட்டளையடியாமாறெல்லாம், 'ஐவகை யடியு மாசிரியக் குரிய" (தொல் செய். 52) என்னுந் துணையும் கூறிப் பின்னும், 'விராஅய் வரினும் ஒருஉநிலை யிலவே’ (தொல்-செய். 53) எனக் கட்டளையடியன்றியும் அளவடி வருமெனவும் அவை பதினேழ் நிலத்தவெனவுங் கூறி, இனி உரிச்சீரானுஞ் சீர்வரை யறையடி உளவென்பது உம் அவ்வுரிச்சீரால் தளைவகையடி உள வென்பது உம் அவை பதினேழ் நிலத்தின் இகந்துவாராவென் பதுரஉங் கூறுகின்றமையின்.2 முன் பக்கத் தொடர்ச்சி வகையின் பாவின் ஒசையினைத் தருவனவாதலின் அவை மூன்றும் நீங்கலாக, நேரொன்றாசிரியத்தளை. திரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, கலித்தளை என்னும் தான்குதளைகளை மட்டும் தொல்காப்பியனார் இவ்வியலிற் கட்டி விளக்குகின்றார். 1. இவற்றுள் நேரொன்றாசிரியத்தளையும் திரையொன்றாசிரியத்தளையும் உரியதன் சீர் எனச்சீர்வகையுளடங்குமாயினும் அவற்றால் இயற்சீர் வெண் டளை கொள்ளவேண்டுதலின் ஆசிரியத்தளையும் உடன்கூறவேண்டிய இன்றியமையாமை தேர்ந்தது என்பதாம். எனவே நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை எனவரும் இந்நான்கும் உரியதன்சீர் ஒன்றிவருதலாற் கொள்ளப்படும் தளைகள் என்பதும், இயற்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றாவஞ்சித்தளை இவை மூன்றும் ஒன்றாமையால் தளைக்கப்படும் தளை யென்பதும் நன்குபுலனாம். இங்கனம் ஆசிரியர் தொல்காப்பியனார் தன்சீர்வகையினும் தளைநிலைவகையினும் பாவின் அடியே ஒசையினைப் பாகுபடுத்துந்திறத்தினை வகைப்படுத்தி விளக்கிய முறையில் அமைந்தது, 'தன்சீர் தனதொன்றிற் றன்றளையாந் தணவாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக்குரித்து வல்லோர் வகுத்த வெண்சீர் விகற்பங்கலித்தளையாய் விடும், வெண்டளையாம் ஒண் சீரகவலுரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே' (யா. காரிகை-10) எனவரும் யாப்பருங்கலக்காரிகையாகும். 2. உரிச்சீராலும் சீர்வகையடி யுளவெனவும் அவ்வுரிச்சீரால் தளைவகை படியுளவெனவும் அவை முற்குறித்த பதினேழ்நிலத்தினைக்கடந்து வருதல் இல்லை யெனவும் இச்சூத்திரத்தில் முன்னர்க்கூறப்படாத விதியைக் கூறுகின்றமையின் எய்தாதது எய்துவித்தது' எனக்கருத்துரைவரையப்பெற்றது.