பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருஉ உசுரு ஒசை பிறவாதென்பது அறிவித்தற்கென்பது. எனவே. ஒன் றிடையிட்டும் இரண்டிடையிட்டும் இன்சீர் வரல்வேண்டுவதாம். 'இன்சீர்வகையின் என இயற்சீர்களான் உரிச்சீர்களை வகுத்து நிறீஇக் கொள்ளப்படும். உ - ம் : “ஒங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை யருவி" எனவும், "நிவந்துதோன்று களிற்றி னிலங்குகோடு புரைய” எனவும் இவை இயற்சிரொன்று இடையிட்ட ஆசிரியவுரிச்சீரான் வந்த நேரடி. 'பாம்புமணி யுமிழும் பானா ளிங்குவரல்” என்பது இயற்சீரிரண்டு இடையிட்டு வந்தது. இதுவும் "அசையுஞ் சீருமிசையொடு சேர்த்தி” (த்ொல்-செப். 11) என்பதனான் அகவலோசை வழுவினவா றறிந்துகொள்க. இனி, தன் சீரால் தளைநிலையடி வருமாறு : "ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளிஇ (புறம். 55) "உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை” (புறம். 3) என வரும். தளைவகை யென்னாது நிலை யென்றதனான், அவற்று இரண்டாசிரியவுரிச்சீரும்: அடிமுதற்கணின்று சீராவதன்றி இடைவாரா வென்பது கொள்க தளைநிலை யென்னாது வகை’ யென்ற தென்னையெனின், உரிச்சீரால் தளைவழங்கின் ஒரடிக் கண் இரண்டுவரின் ஓசையுண்ணா தென்பதுணர்வித்தற்கென்பது. இவையும் இன்சீர் வகையொடு வருமெனவே தன் சீர் இயற்சீ ரொடு தட்குமென்பதாம்3 அஃதேல், "தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா (தொல்-செய். 55) 1 , தன்சீர் என்றது, ஆசிரியவுரிச்சிரை , 2. இரண்டாசிரியவுரிச்சீர் என்றது, நீடுகொடி, குளிறுபுலி என உரியசைப் பின் நிரைவந்த இருசீர்களையும். இவையிரண்டும், அடிமுதற்கனன்றி இடையே @dT仄了。 3. ஆசிரியவுரிச்சீரால் தளைகொள்ளுங்கால் ஒரடிக்கண் இரண்டு தொடர்ந்துவரின் ஒசையுண்ணாதெனவும் எனவே இயற்சீர் ஒன்றும் இரண்டும் இடையிட்டு வருமெனவும் அங்ங்ணம் வருங்கால் ஆசிரியவுரிச்சீர் இயற்சீரொடு தளைக்கும் எனவும் கொள்வர் பேராசிரியர்