பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசுகள் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என வருகின்ற சூத்திரத்தானே தன்சீர் போதுமாகலின் ஈண்டுத் தளை நிலை வகையே கூறுகவெனின், இஃது ஆசிரியத்திற்குக் கூறினான்; அது வெண்பாவிற்குக் கூறினான்; அல்லாக்கால், அது மிகையாமென்பது. எனவே, தன்சீர்வகை நாலெழுத்திற்கு உரித்தன்றென்பது உம், தளைவகையடி, குறளடி முதன் மூன்று நிலத்திற்கும் உரித்தென்பது உம் உரையிற் கொள்க.2 "ஓங்கு கோட்டுமீது பாய்ந்து பாய்ந்து முசுக்கலை யாடு நாடற்கு உரைப்பதை யெவன்கொனந் தோளே தோழி இ’ என்பது ஐந்தெழுத்தால் தன்சீரடி வந்தது. 'ஆடுகொடி துடங்கு காடு போந்து விளங்கிழை கோயிற் சேர்ந்தனம் முழங்குக வானந் தழங்குகுரல் சிறந்தே" என்பது ஏழெழுத்தால் தளைநிலையடி வந்தது. பிறவும் அன்ன இன்சீரென்னாது வகை யென்றதனால் இயற்சீர்ப்பாற் படுத்து இயற்றிக்கொள்ளப்பட்ட அசைச்சீரும் (செய்-28} இன் சீரேயாம் தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் இடையிட்டு வந்ததென்பது. இவை மேற்காட்டியவற்றுள் காணப்படும் (ருச) நச்சினார்க் திரிையம் : இஃது எய்தாத தெய்துவித்தது; உரிச்சீராற் சீர்வகையடியும் உரிச்சீராற் றளைவகையடியும் உள, அவையும் முற்கூறிய ஐவகைநிலனும் பெறுமென்றலின். தன்சீரெனவே அதிகாரத்தான் ஆசிரியவுரிச்சீராயிற்று. 1. தன் சீர்வகையினுந்தளை நிலைவகையினும் என இங்குக் கூறியவிதி ஆசிரியப்பாவுக்கு எனவும், "தன்சீருள்வழித்தளைவகைவேண்டா என அடுத்துவரும் நூற்பாவிற் கூறியவிதி வெண்பாவுக்கு எனவும் பகுத்துணர்தல் வேண்டும். 2. தன் சீராகிய ஆசிரியவுரிச்சீரடி நாலெழுத்துக்கு உரித்தன்றென்பதும், தள்ைவகையடி குறளடிமுதன் மூன்றுநிலத்திற் குரித்தென்பதும் உரையிற்கோடல் என்னும் உத்தியாற் கொள்ளப்படும். 3. "இன் சீர் ' என்ற அளவிலமையாது இன் சீர்வகை என விரித்துக்கூறினமையால், இயற்சீர்பாற்படுத்து இயற்றிக்கொள்ளப்பட்ட நேர்பு, நிரைபு என்னும் அசைச் சீரும், இயற்சீர்பாற்படுத்தியற்றினர் கொளலே, தளைவகை சிதையாத் தன்மையான' (செய். 28) என்ற விதிப்படி இயற்சீராகவே வைத்துத் தளைகொள்ளப்படும் என்பதாம்.