பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருஉ క్ష_3; '); வெண்சி ரொன்றியது வெண்டளை யாகாதென்றற்குக் காரணமென்னை யெனின், "அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான’ (தொல்-செய்-58) என்புழி, அளவுஞ் சிந்தும் அல்லாத ஏறிய நிலமெல்லாம் வெண்பாவுங் கலிப்பாவுந் தம்மில் தளைவகையொக்குமென்றா னாகலினென்பது. எனவே, வெண்சீர் நான்கும் ஒன்றிவரின் அது கலிப்பாவிற்குஞ் சீர்வகையடியாவதாயிற்று. மற்று, வஞ்சியுரிச்சீருந் தன்சீராகலின் இன்னவாறு தளை கொள்ளு மென்றானோவெனின், அவை தன்சீருள்வழி ஒன்றி னும் ஒன்றாவாயினும், பிறசீர் வந்துழி ஒன்றினும் ஒன்றாவாயி னும் வஞ்சித்தளையாகி வரையறையின்மையானும் வஞ்சியடி அறுநூற்றிருபத்தைந்தடியுட் படாமையானும் அவை கூறா னாயினான் ஆசிரியனென்பது.? (ருரு) தச்சினார்க்கி ரிையம் : இது முன் ஆசிரியத்திற்குச் சீர்வகையுந் தளைவகையுங் கூறியமுறையே வெண்பாவிற்கும் அவ்விரண்டுங் கூறுகின்றது. (இ - ள்.) வெண்சீர்நிற்ப வெண்சீர் வந்தொன்றிய வெண்ட ளை கட்டளை வெண்பாவிற்கு வேண்டா. எ-று. எனவே வெண்சீர் நிற்ப வெண்சீர் வந்தொன்றிய வெண்ட ளை கட்டளைக் கலிக்கு ஈரடிக்கூட்டத்துத் தொடைகொள்வழி வேண்டும் என்று கொள்க. இது தொடைகொள்வழிக் காண்க. 1 . வெண்பாவுக்குரியவாகிய அளவடி ஐந்தும்சிந்தடி மூன்றும் என எட்டு நிலத்தின் மிக்கு ஏறிய நிலம் யாவும், வெண்பாவும் கலிப்பாவும் தம்மில் தளை. வகையொக்கும் என ஆசிரியர் கூறுதலால், வெண்சீர்களே ஒன்றிவரும் அடி வெண்டளையாகாதாயிற்று. 2. இன்னவாறு தளை கொள்ளுமென்னானோவெனின் - எனத் திருத்திக் கொள்க. 3. வஞ்சிப்பா, தன்சீர்களாக வஞ்சியுரிச்சீர்களைப் பெற்றிருத்தலின், அது பற்றித் தளைகொண்டு அடிவகுத்தல் முறையாயினும், அவை தன்சீருள்வழி ஒன்றிவரினும் ஒன்றாதுவரினும் பிறசீர்வந்துழி ஒன்றினும் ஒன்றாதுவரினும் வஞ்சித்தளையாகித் தளைபற்றிய வரையறையின்மையானும் எழுத்தெண்ணிவகுக்கப்பெற்ற அறுநூற்றிருபத்தைந்தடியுள் வஞ்சியடி சேர்க்கப்படாமையானும் வஞ்சியுரிச்சீர் இன்னவாறு தளைகொள்ளப்பெற்று இத்தனையடியாம் எனத் தொல்காப்பியர் தனித்தெடுத்துக்கூறாது விட்டார் என்பதாம்.