பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் தன்சீரென்றது. வெண்சீரை; உள்வழியென்றது அவ்வெண்சீரே வருஞ்சீராயவழி யென்றவாறு; எனவே வெண்சீர் நிற்ப இயற்சீர் வந்தொன்றிய வெண்டளை வேண்டும் என்றவாறாயிற்று; இது நுதலியதறிதற்பாற்படும்.! வெண்சீ ரொன்றின் வெண்டளை கொளாஅல்? வெண்சீ ரொன்றினும் வெண்டளை யாகும் இன்சீர்விரவிய காலை யான'3 என்றார் காக்கைபாடினியார். இது தளை கொள்ளாமைக்குக் காரணம் 'அளவுஞ் சிந்தும்’ (செய்-ருஅ) என்னுஞ் சூத்திரத்துட் கூறுதும், - ஆய்வுரை : இது, தளைக்கண் வருவதோர் மரபு உணர்த்துகின்றது. (இ-ள்) பாவுக்குரிய தன்தன் சீர்நிலை வகையானும் தளைநிலை வகையானும் இனிய ஓசை வேறுபாட்டினையுடையனவாய் வரும் ஐந்தடிக்கும் நிலைபெறுதற்குரிய தன்தன்சீர் உள்ளவிடத்துத் தளை வேறுபாடு கொள்ளுதல் வேண்டா. எனவே சீர்தானே ஒசையைத்தரும் எறு. - - குறளடி முதலாக எண்ணப்பட்ட ஐந்தடிகளையும் சீர்வகை பற்றியும் தளைவகை பற்றியும் பகுத்துரைத்தல் மரபென்பதும், அவ்வப்பாக்களுக்குரிய சீர்கள் வருமிடத்து அச்சீர்களே அந்தப் பாவின் ஒசையைத் தரும் என்பதும், அவ்விடத்துத் தளைவேறுபாடு கொள்ளவேண்டிய இன்றியமையாமையில்லை யென்பதும் 1. துதவியதறிதல் என்பது ஒர் உத்தி. சூத்திரத்துள் ஒதிய பொருளாற் சொல்லப் படும் பயன் இல்லது போலச் சொல்லியதனானே அதற்கேற்ற வகையாற் கருதியுணரப்படும் பொருள் இன்னதென்று கொள்ள வைத்தல், 2. வெண்சீர் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றிய வெண்டளையினைக் கட்டளை வெண்பாவிற்குக் கொள்ளற்க' என்பது இதன் பொருளாகும். 3. வெண்சீர் நிற்ப இயற்சீர் வந்து ஒன்றிய வெண்டளை கட்டளையடிக்கு வேண்டப்படும் என்பதாம். 4. இவர் தொல்காப்பியனார்க்கு அகவையிற் குறைந்தவராய் அவர் காலத்து வாழ்ந்த காக்கைபாடினியாராவர். யாப்பருங்கல விருத்தியுட் குறிக்கப்படுபவர் பிற்காலத்துக் காக்கைபாடினியார். இருவரும் வெவ்வேறு காலத்தவர்.